டெட்ரா-டெர்ட்-பியூட்டைல்மெத்தேன்
டெட்ரா-டெர்ட்-பியூட்டைல்மெத்தேன் (Tetra-tert-butylmethane) என்பது C17H36 அல்லது (H3C-)3C-)4C என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட கருத்தியலான ஒரு கரிமச் சேர்மமாகும். இச்சேர்மத்தை டெட்ரா-மூவிணைய—பியூட்டைல்மீத்தேன் என்றும் அழைக்கலாம். அநேகமாக இதுவொரு ஆல்கேனாக இருக்கும். குறிப்பாக எப்டாடெக்கேன் மாற்றியம் பக்கக் கிளையாக இணைந்திருக்கும். இதனுடை நேதியியல் முறைப்படியான பெயர் 3,3-டை-டெர்ட்-பியூட்டைல்-2,2,4,4-டெட்ராமெத்தில்பென்டேன் ஆகும்.
இனங்காட்டிகள் | |
---|---|
4103-17-7 | |
ChemSpider | 14288112 |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 14123361 |
| |
பண்புகள் | |
C17H36 | |
வாய்ப்பாட்டு எடை | 240.48 g·mol−1 |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
மிகச் சிறிய நிறைவுற்ற வளையமிலா ஐதரோகார்பனாக இது பரிந்துரைக்கப்பட்டு கவனத்தை ஈர்க்கிறது. கொள்ளிடத்தடை காரணமாக இச்சேர்மம் நிலைத்திருக்காது[1] என்று கருதப்படுகிறது. இருப்பினும், கணிப்புக்கள் இம்மூலக்கூறு நிலையானதாக இருக்கும் என்கின்றன. 0.1661 nm C-C பிணைப்புகள் 0.1661 நானோமீட்டர் நீளத்துடன் வழக்கமான C-C பிணைப்பை விட நீளமாகவும், ஆனால் வேறு சில உண்மையான மூலக்கூறுகளை விட இன்னும் குறைவான நீளமும் கொண்டவையாக இருக்கும்[2].
மேற்கோள்கள்
தொகு- ↑ da Silva, K.M.; Goodman, J.M. (2005). "What is the smallest saturated acyclic alkane that cannot be made?". Journal of Chemical and Information Modeling 45 (1): 81–87. doi:10.1021/ci0497657. பப்மெட்:15667132.
- ↑ Cheng, M-F; Li, W-K (2003). "Structural and energetics studies of tri- and tetra-tert-butylmethane". Journal of Physical Chemistry A 78 (1): 5492–5498. doi:10.1021/jp034879r.