டென்மார்க் நாட்டுப்பண்
"டேர் எர் அண்ட் யூன்டிண்ட் லேண்ட்" (டேனிய மொழி: "Der er et yndigt land"; டேனிய பலுக்கல்: [tɛɐ̯ ˈɛɐ̯ e̝t ˈøntit ˈlænˀ, tɑ -]; மொ. 'ஒரு அழகான நாடு'), பொதுவாக ஆங்கிலத்தில் "There is a lovely country" என்று மொழிபெயர்க்கப்படுகிறது, இது டென்மார்க்கின் தேசிய கீதங்களில் ஒன்று ஆகும்.
தமிழ்: ஒரு அழகான நாடு ஆங்கிலம்: There is a Lovely Land | |
---|---|
டென்மார்க் தேசிய கீதம் | |
இயற்றியவர் | ஆடம் ஓலன்ஸ்லேகர், 1819 |
இசை | ஹன்ஸ் ஏர்ன்ஸ்ட் க்ரோயர், 1835 |
சேர்க்கப்பட்டது | 1835 |
இசை மாதிரி | |
ஐ. அ. கடற்படை இசைக்குழு கருவி பதிப்பு |
வரலாறு
தொகுஇந்தப் பாடல் 1819 ஆம் ஆண்டில் ஆடம் ஓலன்ஸ்லேகரால் இலத்தீன் மொழியில் எழுதப்பட்டது. இந்த படலுக்கான இசை 1835 ஆம் ஆண்டு ஹன்ஸ் ஏர்ன்ஸ்ட் க்ரோயரால் அமைக்கப்பட்டது. பின்னர், தாமஸ் லாபும், கார்ல் நீல்சனும் ஒவ்வொருவரும் வெவ்வேறு மெட்டுகளை உருவாக்கினர், ஆனால் அது பெரும்பாலும் பரந்த அளவில் புழக்கத்துக்கு வரவில்லை. இக்காலத்தில் பொதுவாக அதுகுறித்து பொது மக்களுக்கு தெரியவில்லை.இலத்தீன்: Ille terrarum mihi praeter omnes angulus ridet
மூலத்தில் இப்பாடல் 12 பத்திகள் கொண்டது. சில ஆண்டுகளுக்குப் பின்னர் முதல், மூன்றாவது, ஐந்தாவது, கடைசி பத்திகள் மட்டும் பயன்படுத்தப்பட்டன. அதுவும் மாறி தற்போது முதல் பத்தியில் ஆறு, நிறைவுப் பத்தியில் மூன்று என மொத்தம் ஒன்பது வரிகள் மட்டுமே பாடப்படுகின்றன.
டென்மார்க் இரண்டு தேசிய கீதங்களைக் கொண்ட நாடு ஆகும். அதில் ஒன்று ராயல் கீதமாக அரசவைக்கு மட்டுமே பயன்பாட்டில் உள்ளது. மக்களுக்கான கீதம் 1819 இல் இயற்றப்பட்ட கீதமாகும்.[1] [2]
இசை
தொகுவரிகள்
தொகுடேனிய மொழி | தமிழ் மொழிபெயர்பு | சொற் பொருள் | இலக்கிய மொழிபெயற்பு |
---|---|---|---|
Der er et yndigt land, |
நேசமிகு நாடு ஒன்று உள்ளது |
There is a lovely land |
There is a lovely country |
குறிப்புகள்
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "Not one but two national anthems". Ministry of Foreign Affairs of Denmark. Archived from the original on 15 மே 2014. பார்க்கப்பட்ட நாள் 19 May 2014.
- ↑ Udenrigsministeriet (6 August 2001). "Instruks for Udenrigstjenesten". Retsinformation. பார்க்கப்பட்ட நாள் 30 June 2013.
வெளி இணைப்புகள்
தொகு- Aarhus Universitet - original lyrics by Oehlenschläger