டெர்பியம் சிலிசைடு

டெர்பியம் சிலிசைடு (Terbium silicide) என்பது TbSi2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு வேதிச் சேர்மம் ஆகும். இச்சேர்மம் டெர்பியம் என்ற அருமண் உலோகத்துடன் சிலிக்கான் சேர்ந்து வினைபுரிவதால் உருவாகிறது. சாம்பல் நிறத்தில் உள்ள இச்சேர்மம் முதன்முதலில் 1950 ஆம் ஆண்டுகளில் விவரிக்கப்பட்டது.[1]

டெர்பியம் சிலிசைடு
Terbium silicide
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
டெர்பியம் சிலிசைடு
வேறு பெயர்கள்
டெர்பியம் சிலிக்கான்
சிலிக்கான் டெர்பியம்
டெர்பியம் இருசிலிசைடு
பண்புகள்
TbSi2
வாய்ப்பாட்டு எடை 215.09 கி/மோல்
தோற்றம் சாம்பல் நிறப்பொடி
கரையாது
கட்டமைப்பு
படிக அமைப்பு செஞ்சாய்சதுரம் அல்லது அறுகோணம்
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
| colspan=2 |  Y verify (இதுY/N?)

டெர்பியம் சிலிசைடின் உலோக மின்கடத்துகை மற்றும் மின்தடைத்திறன் மற்றும் சுகோட்கை தடை ( என்- வகை கலப்பிடப்பட்ட சிலிக்கான் மீது) முதலான பண்புகள் காரணமாக இது அகச்சிவப்புக் கதிர் உணரிகள், ஓம்விதித் தொடர்புகள், காந்த மின்தடைக் கருவிகள் மற்றும் வெப்பமின் கருவிகள் போன்றவற்றில் பயன்படுகிறது.

16 கெல்வின் வெப்பநிலையில் இச்சேர்மம் எதிர் அயக்காந்தப் பணபை வெளிப்படுத்துகிறது. [2]

மேற்கோள்கள்

தொகு
  1. Perri, J. A.; Binder, I.; Post, B. (1959). "Rare earth metal disilicides". The Journal of Physical Chemistry 63 (4): 616–619. doi:10.1021/j150574a041. 
  2. Sekizawa, K.; Yasukochi, K. (1966). "Antiferromagnetism of disilicides of heavy rare earth metals". Journal of the Physical Society of Japan. 21 (2): 274–278. doi:10.1143/JPSJ.21.274. Bibcode: 1966JPSJ...21..274S 
"https://ta.wikipedia.org/w/index.php?title=டெர்பியம்_சிலிசைடு&oldid=2052393" இலிருந்து மீள்விக்கப்பட்டது