டெல்டா பேரியான்
டெல்டா பேரியான்கள் (Delta baryons, Δ baryons) அல்லது டெல்டா ஒத்திசைவுகள் (Delta resonances) என்பவை அணுவடித்துகள் வகைகளில் ஒன்றாகும். இவை மூன்று மேல் (u) அல்லது கீழ் (d) குவார்க்குகளினால் உருவாக்கப்படுகின்றன.
நான்கு வகை Δ பேரியான்கள் உள்ளன:: Δ++
(இதிலுள்ள குவார்க்குகள்: uuu), Δ+
(uud), Δ0
(udd), மற்றும் Δ−
(ddd) ஆகியனவாகும். இவை முறையே +2 e, +1 e, 0 e, மற்றும் −1 e மின்னூட்டங்களைக் கொண்டு செல்கின்றன.
Δ பேரியான்களின் திணிவு (நிறை) அண்ணளவாக 1,232 MeV/c2 ஆகவும், சுழற்சி 3/2 ஆகவும், சமதற்சுழற்சி 3/2 ஆகவும் உள்ளன. பொதுவாக, Δ பேரியான்கள் 'அருட்டிய' அணுக்கருனிகள் (N) ஆகும். Δ+
(uud), Δ0
(udd) ஆகியன உயர்-ஆற்றல் கொண்ட புரோத்தன்களுக்கும் (N+
, uud), நியூத்திரன்களுக்கும் (N0
, udd) சமமானவையாகும். ஆனாலும், Δ++
, Δ−
ஆகியவற்றுக்கு சமமான நியூத்திரன்கள் கிடையாது.
பட்டியல்
தொகுதுகளின் பெயர் | குறியீடு | குவார்க்குகள் | ஓய்வுத் திணிவு (MeV/c2) | I3 | JP | Q (e) | S | C | B′ | T | சராசரி வாழ்வுக்காலம் (செ) | பொதுவாக தேய்வது |
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
டெல்டா[1] | Δ++ (1232) |
uuu | 1,232 ± 2 | +3⁄2 | 3⁄2+ | +2 | 0 | 0 | 0 | 0 | (5.63±0.14)×10−24[அ] | p+ + π+ |
டெல்டா[1] | Δ+ (1232) |
uud | 1,232 ± 2 | +1⁄2 | 3⁄2+ | +1 | 0 | 0 | 0 | 0 | (5.63±0.14)×10−24[அ] | π+ + n0 or |
டெல்டா[1] | Δ0 (1232) |
udd | 1,232 ± 2 | −1⁄2 | 3⁄2+ | 0 | 0 | 0 | 0 | 0 | (5.63±0.14)×10−24[அ] | π0 + n0 or |
டெல்டா[1] | Δ− (1232) |
ddd | 1,232 ± 2 | −3⁄2 | 3⁄2+ | −1 | 0 | 0 | 0 | 0 | (5.63±0.14)×10−24[அ] | π− + n0 |
[அ] ^ PDG அறிக்கையின் படி, ஒத்திசைவு அகலம் (Γ). இங்கு τ = ℏΓ என்ற சமன்பாடு பயன்படுத்தப்பட்டுள்ளது.
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 1.3 J. Beringer et al. (2013): Particle listings – Δ(1232)
உசாத்துணை
தொகு- C. Amsler et al. (Particle Data Group) (2008). "Review of Particle Physics". Physics Letters B 667 (1): 1. doi:10.1016/j.physletb.2008.07.018. Bibcode: 2008PhLB..667....1P.