டெல் அவீவ் மாவட்டம்

இசுரேல் நாட்டில் உள்ள ஆறு நிர்வாக மாவட்டங்களில் ஒன்று

டெல் அவீவ் மாவட்டம் (எபிரேயம்: מָחוֹז תֵּל אָבִיב; அரபு மொழி: منطقة تل أبيب‎) இசுரேல் நாட்டில் உள்ள ஆறு நிர்வாக மாவட்டங்களில் மிகச் சிறிய மாவட்டமாகவும் மக்கள் அடர்த்தி கொண்ட மாவட்டமாகவும் உள்ளது. மாவட்டத்தின் மொத்த மக்கள் தொகை 13,88,400 ஆகும்.[1] இதில் 98.9% யூதர்கள் மற்றும் 1.10% அராபியர்கள்

டெல் அவீவ் மாவட்டம்
இசுரேல் இசுரேல் நாட்டின் மாவட்டம்
- transcription(s)
 • எபிரேயம்מָחוֹז תֵּל אָבִיב
 • அரபுمنطقة تل أبيب
நகரங்கள்10
உள்ளூர் சபைகள்2
பிராந்திய சபைகள் Councils0
தலைநகர்டெல் அவீவ்
பரப்பளவு
 • மொத்தம்186 km2 (72 sq mi)
மக்கள்தொகை
 (2016)
 • மொத்தம்13,88,400
ஐஎசுஓ 3166 குறியீடுIL-TA

டெல் அவீவ் நகரம் மாவட்டத்தின் தலைநகர் மற்றும் தொழில்நுட்ப பெருநகரம் ஆகும். மாவட்டத்தின் இரு தொழில்நுட்ப மற்றும் வரத்தக நகரங்களில் ஒன்றாகும். அருகில் உள்ள மற்றொரு நகரம் குஷ் தான் ஆகும்.

இசுரேலின் ஆறு நிர்வாக மாவட்டங்களில் டெல் அவீவ் மாவட்டம் மட்டுமே ஜூடா மற்றும் சமாரியா பகுதி எல்லையுடன் தொடர்பில்லாத மற்றும் சர்வதேச எல்லை இல்லாத மாவட்டம் ஆகும். இந்த மாவட்டம் வடக்கு, கிழக்கு மற்றும் தெற்கே மத்திய மாவட்டத்தால் சூழப்பட்டுள்ளது. மேற்கே மத்தியதரைக் கடல் அமைந்துள்ளது. மாவட்டத்தின் மக்கள் தொகை அடர்த்தி 7,259/கிமீ2 ஆகும்.

மேற்கோள்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=டெல்_அவீவ்_மாவட்டம்&oldid=2801971" இலிருந்து மீள்விக்கப்பட்டது