டேவிட் தேவதாசு

டேவிட் தேவதாசு (David Devadas) இந்திய எழுத்தாளரும், இதழாளரும், விமர்சகரும், ஆவணப்படத் தயாரிப்பாளருமாவார். இவர் காசுமீர் பிரச்சனை பற்றிய எதிர்காலத்தைத் தேடி (In search of Future) என்னும் நூல் ஆசிரியர் ஆவார். இவர் பத்திரிக்கைத் துறையில் முப்பதாண்டுகால அனுபமுடையவர். இந்தியா டுடே, தி நியூ இந்தியன் எக்சுபிரசு, கல்ஃப் நியூசு, இந்துசுதான் டைம்சு மற்றும் தி எகனாமிக் டைம்ஸ் பத்திரிக்கைகளின் நிருபருமாவார்.[1][2][3] இவர் 2005ல் சமியா மிலியா இசுலாமியப் பல்கலைக்கழகத்தின் கவுரவப் பேராசிரியராகவும், நேரு நினைவு அருங்காட்சியகம் மற்றும் நூலகத்தின் மூத்த உறுப்பினராகவும் (2009-2014) பணியாற்றியுள்ளார். பின்னர் சம்மு காசுமீரின் முக்கிய ஆங்கில நாளிதழின் ஆசிரியராகவும் காசுமீர் அவன்டிபூரில் உள்ள இசுலாமிய அறிவியல் மற்றும் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தின் பேராசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.

டேவிட் தேவதாசு
David Devadas
பிறப்புமும்பை, மகாராட்டிரம், இந்தியா
தேசியம்இந்தியர்
படித்த கல்வி நிறுவனங்கள்தில்லி தூய சேவியர் பள்ளி,
தில்லி தூய இசுடீவன் கல்லூரி
பணிஎழுத்தாளர், இதழாளர், விமர்சகர், ஆவணப்படத் தயாரிப்பாளர்

நூற்பட்டியல்

தொகு

எதிர்காலத்தைத் தேடி - காசுமீரத்தின் கதை(2007)

மேற்கோள்கள்

தொகு
  1. "Between 'azadi' and 'national interest': Half-truths on Kashmir widen the gulf of ignorance and hate". scroll.in/author/11426. பார்க்கப்பட்ட நாள் 2018-03-26.
  2. "David Devadas Interacts with IDSA Scholars on Kashmir | Institute for Defence Studies and Analyses". idsa.in (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2018-07-08.
  3. "The ‘K’ factor" (in en-IN). The Hindu. 2007-12-08. https://www.thehindu.com/todays-paper/tp-features/tp-metroplus/the-lsquokrsquo-factor/article13779929.ece. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=டேவிட்_தேவதாசு&oldid=4107035" இலிருந்து மீள்விக்கப்பட்டது