டேவிட் லீ
டேவிட் மொரிஸ் லீ (David Lee) (1931 சனவரி 20) அமெரிக்க இயற்பியலாளர் ஆவார். 1996 ஆம் ஆண்டு ராபர்ட் சி ரிச்சர்ட்சன் மற்றும் டக்ளஸ் ஒசிரொப் ஆகியோருடன் இணைந்து சூப்பர் திரவ ஈலியம் கண்டுபிடித்தமைக்காக நோபல் பரிசைப் பகிர்ந்து கொண்டார்.[1]
டேவிட் மொரிஸ் லீ | |
பிறப்பு | சனவரி 20, 1931 ரெய், நியூயார்க் |
---|---|
Alma mater | யேல் பல்கலைக்கழகம் கனெக்டிகட் பல்கலைக்கழகம் ஹார்வர்ட் பல்கலைக்கழகம் |
துறை ஆலோசகர் | ஹென்றி ஏ. பெயார் பெங் |
தனிப்பட்ட வாழ்க்கை
தொகுலீ ரெய், நியூயார்க்கில் பிறந்து வளர்ந்தார்.[2] இவரது தந்தை மார்வின் லீ மின்சாரப் பொறியியலாளரும், தாய் அனெட் பிராங்ஸ் ஆசிரியரும் ஆவார். இவர்கள் இங்கிலாந்து மற்றும் லித்துவேனியாவில் இருந்து குடியேறிய யூதர்கள். 1952 ஆம் ஆண்டு லீ ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றார். பின்பு ஐக்கிய அமெரிக்க இராணுவத்தில் இணைந்து 22 மாதங்கள் பணி புரிந்தார். இராணுவத்தில் இருந்து வெளியேறிய பின் கனெக்டிகட் பல்கலைக்கழகத்தில் முதுகலை பட்டம் பெற்றார். 1955 இல் யேல் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற கற்கும் போதே ஹென்றி ஏ. பேர்டன்பாங் இன் கீழ் திரவ ஈலியம் தொடர்பான ஆய்வுகளை மேற்கொண்டார்.
1959 இல் முனைவர் பட்டம் பெற்றபின் கார்னெல் பல்கலைக்கழகத்தில் இயற்பியல் ஆய்வகத்தை அமைப்பதற்கான பணியில் அமர்த்தப்பட்டார். கார்னெல் பல்கலைக்கழகத்தில் அவரது வருங்கால் மனைவி டானாவை சந்தித்தார். அச்சமயம் டானா வேறொரு துறையில் முனைவர் பட்டத்திற்காக படித்துக் கொண்டு இருந்தார். இத்தம்பதியினருக்கு இரு புதல்வர்கள் உண்டு. 2009 நவம்பரில் லீ கார்னெலில் இருந்து டெக்ஸாஸ் ஏ என்ட் எம் பல்கலைக்கழகத்தில் இணைந்தார்.[3][4][5] 2016 ஆம் ஆண்டு அவரது மனைவி டானா உடல் நிலை பாதிக்கப்பட்டு மரணமடைந்தார்.
பணி
தொகுலீ, ராபர்ட் சி ரிச்சர்ட்சன் மற்றும் பட்டதாரி மாணவரான டக் ஒசிரோப் ஆகியோருடன் இணைந்து பொமரன்சு செல்லை பயன்படுத்தி குறைந்த வெப்பநிலையில் 3He இனை ஆராய்ந்தனர். இதன் விளைவாக சூப்பர் ப்ளூயிட் ஈலியத்தை கண்டறிந்தனர்.[6][7] இக் கண்டுபிடிப்புக்கான நோபல் பரிசை 1996 ஆம் ஆண்டு மூவரும் பகிர்ந்து கொண்டனர். மேலும் லீ குறைந்த வெப்பநிலை பௌதீகம், திரவ, திண்ம, சூப்பர் ப்ளூயிட் ஈலியம் (4He, 3He)மற்றும் அவற்றின் கலவைகள் தொடர்பான ஆராய்ச்சிகளில் ஈடுபட்டார்.
1976 ஆம் ஆண்டு பிரித்தானிய இயற்பியல் நிறுவனத்தினால் சார் பிரன்சிஸ் சிம்மொன் ஞாபகார்த்த பரிசினை பெற்றுக் கொண்டார். 1981 ஆம் ஆண்டு அமெரிக்க இயற்பியல் சங்கத்தினால் ஒலிவர் பக்லி பரிசு லீ, டக் ஒசிரோப் , ரொபர்ட் ரிச்சரட்சன் ஆகிய மூவருக்கும் வழங்கப்பட்டது. லீ தேசிய அறிவியல் அகாதமி மற்றும் அமெரிக்க சயன்ஸ் அன்ட் ஆர்ட்ஸ் அகாதமியின் உறுப்பினர் ஆவார்.தற்சமயம் டெக்ஸாஸ் ஏ அன்ட் எம் பல்கலைக்கழகத்தில் கற்பித்தல் பணிகளை மேற்கொள்வதோடு ஆராய்ச்சிகளிலும் ஈடுபடுகின்றார்.
குறிப்புகள்
தொகு- ↑ http://nobelprize.org/nobel_prizes/physics/laureates/1996/index.html Foundation. பார்த்தநாள் 2009-10-04
- ↑ https://web.archive.org/web/20100124022856/http://nobelprize.org/nobel_prizes/physics/laureates/1996/lee-autobio.html பார்த்தநாள் 2009-10-13
- ↑ http://media.www.thebatt.com/media/storage/paper657/news/2009/10/01/News/Nobel.Prize.Winner.Joins.Am.Faculty-3788924.shtml%5B%5D[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ http://www.chron.com/disp/story.mpl/hotstories/6643911.html
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2010-03-07. பார்க்கப்பட்ட நாள் 2019-03-08.
- ↑ https://doi.org/10.1103%2FPhysRevLett.28.885
- ↑ https://doi.org/10.1103%2FPhysRevLett.29.920