டைகந்தகம் டையாக்சைடு

வேதிச் சேர்மம்

டைகந்தகம் டையாக்சைடு (Disulfur dioxide) என்பது S2O2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். இருகந்தக ஈராக்சைடு, இருபடி கந்தக மோனாக்சைடு, கந்தக மோனாக்சைடு இருபடி என்று பல பெயர்களால் இது அழைக்கப்படுகிறது. கந்தகத்தின் ஆக்சைடு [2]என்று பொதுவாகக் கருதப்படும் இந்த திண்மச் சேர்மம் நிலைப்புத் தன்மையற்றதாகும். அறைவெப்பநிலையில் சில வினாடிகள் மட்டுமே இருக்கின்ற ஆயுளை கொண்டதாகவும் இது உள்ளது [3].

டைகந்தகம் டையாக்சைடு
Disulfur dioxide
structure of disulfur dioxide, S2O2
டைகந்தகம் டையாக்சைடு மூலக்கூறின் இடம் நிரப்பு மாதிரி
பெயர்கள்
வேறு பெயர்கள்
டைகந்தகம்(II)ஆக்சைடு
SO இருபடி
இனங்காட்டிகள்
126885-21-0 [1]
InChI
  • InChI=1/O2S2/c1-3-4-2
    Key: AXYLJRYHRATPSG-UHFFFAOYNA-N
யேமல் -3D படிமங்கள் Image
SMILES
  • O=[S][S]=O
பண்புகள்
S2O2
வாய்ப்பாட்டு எடை 96.1299 கி/மோல்
தோற்றம் வாயு
கட்டமைப்பு
ஒருங்கிணைவு
வடிவியல்
வளைவு
தீங்குகள்
முதன்மையான தீநிகழ்தகவுகள் நச்சு
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
Infobox references

கட்டமைப்பு தொகு

C2v சமச்சீர்மை கொண்ட சிசு-சமதளக் கட்டமைப்பை டைகந்தகம் டையாக்சைடு ஏற்றுக் கொள்கிறது. S-O பிணைப்பின் பிணைப்பு நீளம் 145.8 பைக்கோ மீட்டர் ஆகும். இது கந்தக மோனாக்சைடிலுள்ள கந்தகம் ஆக்சிசன் பிணைப்பு நீளத்தை விட குட்டையனதாகும். S-S பிணைப்பிலுள்ள பிணைப்பின் நீளம் 202.45 பைக்கோ மீட்டர் ஆகும். OSS பிணைப்புகளுக்கு இடையேயான பிணைப்புக் கோணம் 112.7 பாகைகள் என கணக்கிடப்பட்டுள்ளது. 3.17 டி என்ற இரு முனைத் திருப்புத் திறன் அளவுடன்[4] சமச்சீர்மையற்ற மூலக்கூறாக S2O2 அடையாளப்படுத்தப்படுகிறது[1][5].

தயாரிப்பு தொகு

கந்தக மோனாக்சைடு (SO) தன்னிச்சையாகவும் தலைகீழாகவும் டைகந்தகம் டையாக்சைடாக (S2O2) மாறுகிறது[4].எனவே கந்தக மோனாக்சைடை உருவாக்கும் முறைகளால் இந்த பொருளையும் உருவாக்க முடியும்[5]. கந்தக டை ஆக்சைடில் மின்சுமையை வெளியேற்றப்படுவதன் மூலமும் டைகந்தகம் டையாக்சைடு உருவாகிறது.

கார்பன் ஆக்சிசல்பைடு அல்லது கார்பன் டைசல்பைடு ஆவியுடன் ஆக்சிசனை வினைபுரியச் செய்து தயாரிப்பது மற்றொரு ஆய்வகச் செயல்முறையாகும்[6].

தனிமநிலை கந்தகத்தின் பல்வேறு வடிவங்களும் h SO2 வாயுவுடன் சேர்வதில்லை என்றாலும் அணுநிலை கந்தகம் சேர்ந்து கந்தக மோனாக்சைடாக மாறுகிறது. இது இருபடியாக மாறுகிறது[7]

S + SO2 S2O2
S2O2 ⇌ 2SO

ஈலியத்தில் நீர்த்த கந்தக டை ஆக்சைடில் நுண்ணலை மின்சுமை வெளியேற்றத்தின் வழியாகவும் டைகந்தக டை ஆக்சைடு தயாரிக்கப்படுகிறது[8]. அழுத்தம் 0.1 மில்லிமீட்டர் பாதரசமாக இருக்கும்போது விளைபொருளில் 5 சதவீதம் S2O2. ஆக உருவாகிறது[9]

ஐதரசன் சல்பைடும் ஆக்சிசனும் ஒளிப்பகுப்பிற்கு உட்பட்டு தற்காலிகமாக டைகந்தகம் டையாக்சைடு தோன்றுகிறது[10].

பண்புகள் தொகு

டைகந்தக டையாக்சைடின் அயனியாக்கும் ஆற்றல் 9.93±0.02 எலக்ட்ரான் வோல்ட்டு ஆகும்[6]. வெள்ளி கிரகத்தின் வளிமண்டலத்தில் 320-400 நானோமீட்டரில் டைகந்தக டையாக்சைடு ஈர்க்கப்பட்டுள்ளதாக கண்டரியப்பட்டுள்ளது [11]. அக்கிரகத்தின் பைங்குடில் விளைவுக்கு இவ்வாயு பங்களிப்பதாகவும் நம்பப்படுகிறது [12].

வினைகள் தொகு

கந்தக மோனாக்சைடுடன் டைகந்தக டையாக்சைடு சமநிலையிலிருந்தாலும் இது கந்தக மோனாக்சைடுடன் வினையில் ஈடுபட்டு கந்தக டை ஆக்சைடையும் டைகந்தக மோனாக்சைடையும் உருவாக்குகிறது[8][13].

அணைவுச் சேர்மங்கள் தொகு

இடைநிலை தனிமங்களுடன் டைகந்தக டையாக்சைடு ஈந்தணைவியாக உருவாகிறது. இரண்டு கந்தக அணுக்களும் உலோக அணுவுடன் இணையும் வகையில் இது η2-S,S' என்ற நிலையில் பிணைகிறது[14]. 2003 ஆம் ஆண்டு முதன்முதலில் இது கண்டறியப்பட்டது. பிளாட்டினத்தின் அணைவுச் சேர்மமான பிசு(டிரைமெத்தில்பாசுபீன்) திரேன் எசு-ஆக்சைடை 110 பாகை செல்சியசு வெப்பநிலையில் தொலுயீனில் சூடாக்கும் போது எத்திலீனை இழந்து S2O2: (Ph3P)2PtS2O2 அணைவுச் சேர்மமாக உருவாகிறது[15].

இரிடியம் அணுக்களும் அணைவுச் சேர்மங்களாக உருவாக முடியும். இரிடியம் கலப்பு சோடியம் பெர்ரயோடேட்டு ஆக்சிசனேற்றமடைந்து 1,2-பிசு(டைபீனைல்பாசுபினோ)யீத்தேன் உருவாகிறது[16][17]. S2O2 இச்சேர்மத்தில் ஒரு பக்க மாற்றியன் நிலையில் உள்ளது. இதெ நிபந்தனைகளில் இதை மாறுபக்க மாற்றியனாகவும் மாற்ற முடியும். ஆனால் இதில் இரண்டு தனித்தனியான SO இயங்குறுப்புகள் காணப்படும். இண்டியம் அணைவுச் சேர்மத்தை டிரைபீனைல் பாசுபீனுடன் சேர்த்து சிதைக்கும்போது டிரைபீனைல் பாசுபீன் ஆக்சைடும் டிரைபீனைல் பாசுபீன் சல்பைடும் உருவாகின்றன[16].

எதிர்மின் அயனி தொகு

வாயு நிலையில் டைகந்தகம் டையாக்சைடின் எதிர்மின் அயனி காணப்படுகிறது. SO3 அயனியைப் போல இது முக்கோண வடிவத்தை ஏற்றுக் கொண்டுள்ளது [18]

நிறப்பட்டை தொகு

நுண்ணலைகள் தொகு

இடைநிலை அலைவரிசை மெகா எர்ட்சு[5]
21,1−20,2 11013.840
41,3−40,4 14081.640
11,1−00,0 15717.946
40,4−31,3 16714.167
31,3−20,2 26342.817
42,2−41,3 26553.915
22,0−21,1 28493.046
60,6−51,5 30629.283
52,4−51,5 35295.199
51,5−40,4 35794.527

சூரியக் குடும்பத்தில் தொகு

வெள்ளி நட்சத்திரன் வளிமண்டலத்தில் சிறிதளவு டைகந்தக டையாக்சைடு இருப்பதாக கூறப்படுகிறது. அங்கு இதுவே பைங்குடில் விளைவுகளுக்கு பங்களிப்பதாக கருதப்படுகிறது[11]. புவியின் வளிமண்டலத்தில் டைகந்தக டையாக்சைடு இருப்பதற்கான அறிகுறிகள் ஏதுமில்லை.

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 Demaison, Jean; Vogt, Jürgen (2011). "836 O2S2 Disulfur dioxide". Asymmetric Top Molecules, Part 3. Landolt-Börnstein - Group II Molecules and Radicals. 29D3. Springer. பக். 492. doi:10.1007/978-3-642-14145-4_258. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-3-642-14145-4. https://link.springer.com/content/pdf/10.1007%2F978-3-642-14145-4_258.pdf. [தொடர்பிழந்த இணைப்பு]
  2. "Oxides of sulfur". Inorganic Chemistry. Academic Press. 2001. பக். 530. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9780123526519. https://books.google.com/books?id=Mtth5g59dEIC&pg=PA530. 
  3. Mitchell, Stephen C. (3 September 2004). Biological Interactions Of Sulfur Compounds. CRC Press. பக். 7. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0203362525. 
  4. 4.0 4.1 Spectroscopic studies of the SO2 discharge system. II. Microwave spectrum of the SO dimer Lovas F. J., Tiemann E., Johnson D.R. The Journal of Chemical Physics (1974), 60, 12, 5005-5010 எஆசு:10.1063/1.1681015
  5. 5.0 5.1 5.2 Thorwirth, Sven; P. Theulé; C. A. Gottlieb; H. S. P. Müller; M. C. McCarthy; P. Thaddeus (23 February 2006). "Rotational spectroscopy of S2O: vibrational satellites, 33 S isotopomers, and the submillimeter-wave spectrum". Journal of Molecular Structure 795 (1–3): 219–229. doi:10.1016/j.molstruc.2006.02.055. Bibcode: 2006JMoSt.795..219T. http://hera.ph1.uni-koeln.de/~sthorwirth/pdf/s2o_JMSt_2006.pdf. 
  6. 6.0 6.1 Cheng, Bing-Ming; Wen-Ching Hung (1999). "Photoionization efficiency spectrum and ionization energy of S[sub 2]O[sub 2]". The Journal of Chemical Physics 110 (1): 188. doi:10.1063/1.478094. பன்னாட்டுத் தர தொடர் எண்:0021-9606. Bibcode: 1999JChPh.110..188C. 
  7. Murakami, Yoshinori; Shouichi Onishi; Takaomi Kobayashi; Nobuyuki Fujii; Nobuyasu Isshiki; Kentaro Tsuchiya; Atsumu Tezaki; Hiroyuki Matsui (2003). "High Temperature Reaction of S + SO2→ SO + SO: Implication of S2O2Intermediate Complex Formation". The Journal of Physical Chemistry A 107 (50): 10996–11000. doi:10.1021/jp030471i. பன்னாட்டுத் தர தொடர் எண்:1089-5639. Bibcode: 2003JPCA..10710996M. 
  8. 8.0 8.1 Field, T A; A E Slattery; D J Adams; D D Morrison (2005). "Experimental observation of dissociative electron attachment to S2O and S2O2 with a new spectrometer for unstable molecules". Journal of Physics B: Atomic, Molecular and Optical Physics 38 (3): 255–264. doi:10.1088/0953-4075/38/3/009. பன்னாட்டுத் தர தொடர் எண்:0953-4075. Bibcode: 2005JPhB...38..255F. http://www.qub.ac.uk/schools/SchoolofMathematicsandPhysics/ampr/tfield/reprint-eric1.pdf. பார்த்த நாள்: 2013-05-13. 
  9. Pujapanda, Balaram Sahoo, Nimain C. Nayak, Asutosh Samantaray, Prafulla K.; Balaram, Sahoo; Charan, nayak Nimai; samantaray Asutosh; pujapanda Prafulla Kumar (2012). Inorganic Chemistry. PHI Learning Pvt. Ltd.. பக். 461. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9788120343085. https://books.google.com/books?id=8KAemlQzOj8C. பார்த்த நாள்: 16 May 2013. 
  10. Compton, R. G.; Bamford, C.H.; Tipper, C.F.H. (1972). "Oxidation of H2S". Reactions of Non-Metallic Inorganic Compounds. Comprehensive Chemical Kinetics. Elsevier. பக். 50. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0080868011. https://books.google.com/books?id=GwhMyI_tZO4C. 
  11. 11.0 11.1 BN Frandsen; PO Wennberg; HG Kjaergaard (2016). "Identification of OSSO as a near-UV absorber in the Venusian atmosphere". Geophys. Res. Lett. 43 (21): 11,146. doi:10.1002/2016GL070916. Bibcode: 2016GeoRL..4311146F. https://authors.library.caltech.edu/73255/1/Frandsen_et_al-2016-Geophysical_Research_Letters.pdf. 
  12. "Rare molecule on Venus may help explain planet's weather - Technology & Science - CBC News". Cbc.ca. பார்க்கப்பட்ட நாள் November 11, 2016.
  13. Herron, J. T.; R. E. Huie (1980). "Rate constants at 298 K for the reactions sulfur monoxide + sulfur monoxide + M -> dimeric sulfur monoxi de + M and sulfur monoxide + dimeric sulfur monoxide -> sulfur dioxide + sulfur oxide (S2O)". Chemical Physics Letters 76 (2): 322–324. doi:10.1016/0009-2614(80)87032-1. Bibcode: 1980CPL....76..322H. 
  14. Halcrow, Malcolm A.; John C. Huffman; George Christou (1994). "Synthesis, Characterization, and Molecular Structure of the New S2O Complex Mo(S2O)(S2CNEt2)3.cntdot.1/2Et2O". Inorganic Chemistry 33 (17): 3639–3644. doi:10.1021/ic00095a005. பன்னாட்டுத் தர தொடர் எண்:0020-1669. http://www.chem.ufl.edu/~christou/group/ChristouGroupPapers/138%20Mo%20S2O%20full%20IC.pdf. பார்த்த நாள்: 2019-12-08. 
  15. Lorenz, Ingo-Peter; Jürgen Kull (1986). "Complex Stabilization of Disulfur Dioxide in the Fragmentation of ThiiraneS-Oxide on Bis(triphenylphosphane)platinum(0)". Angewandte Chemie International Edition in English 25 (3): 261–262. doi:10.1002/anie.198602611. பன்னாட்டுத் தர தொடர் எண்:0570-0833. 
  16. 16.0 16.1 Schmid, Günter; Günter Ritter; Tony Debaerdemaeker (1975). "Die Komplexchemie niederer Schwefeloxide, II. Schwefelmonoxid und Dischwefeldioxid als Komplexliganden". Chemische Berichte 108 (9): 3008–3013. doi:10.1002/cber.19751080921. பன்னாட்டுத் தர தொடர் எண்:0009-2940. 
  17. Nagata, K; N. Takeda; N Tokitoh N (2003). "Unusual Oxidation of Dichalcogenido Complexes of Platinum". Chemical Letters 32 (2): 170–171. doi:10.1246/cl.2003.170. பன்னாட்டுத் தர தொடர் எண்:0366-7022. 
  18. Clements, Todd G.; Hans-Jürgen Deyerl; Robert E. Continetti (2002). "Dissociative Photodetachment Dynamics of S2O2-". The Journal of Physical Chemistry A 106 (2): 279–284. doi:10.1021/jp013329v. பன்னாட்டுத் தர தொடர் எண்:1089-5639. Bibcode: 2002JPCA..106..279C. http://checont6.ucsd.edu/pdf/051.clements.2002.pdf. பார்த்த நாள்: 2013-05-13. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=டைகந்தகம்_டையாக்சைடு&oldid=3368919" இலிருந்து மீள்விக்கப்பட்டது