டைட்டன் (தொன்மவியல்)
டைட்டன்கள் (Titans) கிரேக்கத் தொன்மவியலில் கூறப்படும் இரண்டாம் தலைமுறை கடவுள்கள் ஆவர். ஒத்ரைசு மலையை உறைவிடமாகக் கொண்ட இவர்கள் புவி கடவுள் கையாவிற்கும் வானக் கடவுள் யுரேனசிற்கும் பிறந்த குழந்தைகளாவர். ஆறு ஆண்களும் ஆறு பெண்களுமாக மொத்தம் பன்னிரு டைட்டன்கள் உள்ளனர். இவர்கள் ஒலிம்பிய கடவுள்களுக்கு முன் இருந்த கடவுள்கள் ஆவர். டைட்டானோமாச்சி போரில் ஒலிம்பியர்கள் அவர்களை வீழ்த்தி பாதாள உலகில்(டார்டரசு) அடைத்து வைத்தனர்.
முதல் பன்னிரு டைட்டன்களில் நெமோசைன், டெத்தீசு, தேயா, போபே, ரியா மற்றும் தீமிசு ஆகியோர் பெண் டைட்டன்களும் ஓசனசு, ஐபரியோன், கோயசு, குரோனசு, கிரியசு மற்றும் இயபெடசு ஆகியோர் ஆண் டைட்டன்களும் ஆவர்.
இரண்டாவது டைட்டன்கள் குழுவில் ஐபரியோன் மற்றும் தேயாவின் குழந்தைகளான ஈலியோசு, செலேன் மற்றும் இயோசு ஆகியோரும் கோயசு மற்றும் போபேயின் குழந்தைகள் லெலன்டோசு, லெடோ மற்றும் ஆசுடெரியா ஆகியோரும் இயப்டெசு மற்றும் கிலைமீனின் குழந்தைகளான ப்ரோமிதீயுசு, எபிமிதீயுசு மற்றும் மெனோயெடியசு ஆகியோரும் ஒசனசு மற்றும் டெத்தீசின் பிள்ளையான மெட்டீசும் கிரியசு மற்றும் போபே ஆகியோரின் பிள்ளைகளான அசுடரியசு, பல்லாசு மற்றும் பெர்சிசு ஆகியோரும் அடங்குவர்.
தன் தந்தையை வீழ்த்தி குரோனசு அதிகாரத்தை அடைந்தது போல அவரது மகன் சியுசும் தனது ஐந்து சகோதரர்களுடன் சேர்ந்து குரோனசு மற்றும் பிற டைட்டன்களை வீழ்த்தி அதிகாரத்தை அடைந்தார்.
வம்சாவளி
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ எசியோடு, Theogony 132–138, 337–411, 453–520, 901–906, 915–920; Caldwell, pp. 8–11, tables 11–14.
- ↑ Although usually the daughter of Hyperion and Theia, as in எசியோடு, Theogony 371–374, in the Homeric Hymn to Hermes (4), 99–100, Selene is instead made the daughter of Pallas the son of Megamedes.
- ↑ According to எசியோடு, Theogony 507–511, Clymene, one of the Oceanids, the daughters of Oceanus and Tethys, at எசியோடு, Theogony 351, was the mother by Iapetus of Atlas, Menoetius, Prometheus, and Epimetheus, while according to Apollodorus, 1.2.3, another Oceanid, Asia was their mother by Iapetus.
- ↑ According to Plato, Critias, 113d–114a, Atlas was the son of Poseidon and the mortal Cleito.
- ↑ In Aeschylus, Prometheus Bound 18, 211, 873 (Sommerstein, pp. 444–445 n. 2, 446–447 n. 24, 538–539 n. 113) Prometheus is made to be the son of Themis.