கையா
கையா (Gaia (mythology)) என்பவர் கிரேக்கத் தொன்மவியலில் காணப்படும் ஒரு பெண் கடவுள் ஆவார். இவர் பூமியின் கடவுளும் ஆரம்பகால கடவுள்களுள் ஒருவரும் ஆவார். உரோமத் தொன்மவியலில் இவருக்கு ஒப்பானவர் டெரா ஆவார். கிரேக்கத் தொன்மவியலில் வானத்திற்கும் சொர்க்கத்திற்குமான கடவுளான் யுரேனஸ் இவருடைய கணவர் ஆவார். யுரேனசு மற்றும் கையாவின் சேர்க்கையால் பன்னிரு டைட்டன்கள் மற்றும் பல அரக்கர்கள் பிறந்தனர். ஆரம்பகால கடல் கடவுளான போன்டசு மற்றும் கையாவின் சேர்க்கையால் கடல் கடவுள்கள் பிறந்தனர். இதனால் கையாவே உலகில் உள்ள அனைத்து உயிர்களுக்கும் தாயாக இருக்கிறார்.
கையா | |
---|---|
ஆன்செல்ம் ஃபியூவர்பாச்சால் வரையப்பட்ட கையா (1875) | |
இடம் | புவி |
துணை | யுரேனசு, போன்டசு, ஈதர், டார்டரசு |
பெற்றோர்கள் | யாருமில்லை அல்லது சாவோசு (எசியோடு), அல்லது ஈதர் மற்றும் ஏமேரா |
குழந்தைகள் | யுரேனசு, போன்டசு, ஔரியாக்கள், எகாடோன்சிர்கள், சைக்கிளோப்சுகள், டைட்டன்கள், கைகான்டிசுகள், நீரியுசு, தாவுமசு, போர்சைசு, செடோ, யூரைபியா, ஏர்சியா, டைஃபன் மற்றும் பைத்தன் |
பெயர்க்காரணம்
தொகுகிரேக்கச் சொல்லான γαῖα (கையா) இச்சொல்லின் கருத்து பூமி அல்லது புவி ஆகும்.[1]