யுரேனசு (தொன்மவியல்)

(யுரேனஸ் (தொன்மவியல்) இலிருந்து வழிமாற்றப்பட்டது)

யுரேனசு (Uranus) என்பவர் கிரேக்கத் தொன்மவியலில் காணப்படும் வானத்தின் கடவுள் ஆவார். உரோமத் தொன்மவியலில் இவருக்கு ஒப்பானவர் கேலசு ஆவார். இவரின் பெயரில் அடிப்படையிலேயே கதிரவக் குடும்பத்தில் காணப்படும் ஏழாவது கோளான யுரேனசிற்குப் பெயரிடப்பட்டது. இவரது மனைவி பூமி கடவுள் கையா ஆவார். ஈசியோட் எழுதிய தியோகோனியில் கையாவின் மகனாக யுரேனசு குறிப்பிடப்பட்டுள்ளார்.

யுரேனசு
யுரேனசு மற்றும் கையா
இடம்வானம்
துணைகையா
பெற்றோர்கள்கையா (ஈசியோட்) or
ஏத்தர் மற்றும் கையா or
ஏத்தர் மற்றும் எமேரா or
நைக்சு
குழந்தைகள்டைட்டன்கள், சைக்ளோப்சுகள், மெலியே, எரினைசு, கியன்ட்ஸ், எகாடோஞ்சிர்கள் மறஅறும் அப்ரோடிட்[1]

கிரேக்கத் தொன்மவியல் தொகு

யுரேனசு மற்றும் கையாவிற்கு நூறு கைகள் கொண்ட எகாடோஞ்சிர்கள், ஒற்றைக் கண் கொண்ட சைக்ளோப்சுகள் மற்றும் பெரிய உருவம் கொண்ட கைகான்ட்சுகள் என்னும் அரக்கர்கள் போன்ற வலிமை மிகுந்த பிள்ளைகள் பிறந்தனர். இதனால் பயந்த யுரேனசு அவர்களை கையாவிற்குத் தெரியாமல் பாதாள உலகமான டார்டரசில் மறைத்து வைத்தார். அவர்கள் பாதாளத்தில் இருந்து கொண்டு கையாவிற்கு துன்பம் தந்தனர். இதனால் உண்மையை அறிந்த கையா யுரேனசு மீது கோபம் கொண்டு கல்லால் ஒரு அரிவாள் செய்தார். அதைக் கொண்டு யுரேனசை வீழ்த்துமாறு தன் டைட்டன் பிள்ளைகளிடம் கொடுத்தார். ஆனால் அவர்கள் பயந்து பின்வாங்கினர். பிறகு குரோனசு மட்டும் தைரியமாக முன்வந்து அந்த அரிவாளை எடுத்தார். யுரேனசு கையாவுடன் உறவாட முயன்றபோது அவரின் பிறப்புறுப்பை வெட்டி குரோனசு கடலில் வீசியெறிந்தார். அதில் இருந்து பொங்கிய நுரையில் இருந்து கடவுள் அப்ரோடிட் பிறந்ததாகக் கூறப்படுகிறது.

மேற்கோள்கள் தொகு

  1. According to எசியோடு, Theogony 183–200, Aphrodite was born from Uranus' severed genitals, but according to ஓமர், Aphrodite was the daughter of சியுசு (இலியட் 3.374, 20.105; Odyssey 8.308, 320) and Dione (இலியட் 5.370–71), see Gantz, pp. 99–100.

வெளி இணைப்புகள் தொகு

 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Uranus (mythology)
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=யுரேனசு_(தொன்மவியல்)&oldid=2938537" இலிருந்து மீள்விக்கப்பட்டது