எசியோடு (ஹெசியட், /ˈhsiəd/ அல்லது /ˈhɛsiəd/;[1]) கி.மு 750 இலிருந்து 650 வரை செயற்பட்டதாகக் கருதப்படும் கிரேக்கக் கவிஞர் ஆவார். இவர் ஓமரின் சமகாலத்தவராக அறிஞர்களால் கருதப்படுகிறார்.[2][3] ஓர் கவிஞர் தன்னையும் ஒரு கருப்பொருளாகக் கருதிய ஐரோப்பிய கவிதைகளில் இவருடையது முதலாவதாகும். தன்னுடையப் பாடல்களில் தனக்கென குறிப்பிடத்தக்க பாத்திரத்தை கொண்டிருந்தார்.[4] கிரேக்க சமய பழக்கங்களை நிறுவுவதற்கு இவருக்கும் ஓமருக்கும் முக்கிய பங்குள்ளதாக பண்டைய எழுத்தாளர்கள் கருதுகின்றனர்.[5]கிரேக்கத் தொன்மவியல், வேளாண்மை நுட்பங்கள், துவக்க கால பொருளியல் கருத்துக்கள் (இவர் முதல் பொருளியலாளராக அடையாளப்படுத்தப்படுகிறார்),[6] வழக்கொழிந்த கிரேக்க வானியல் மற்றும் பண்டைய நேரப்பதிவு போன்றவற்றிற்கான முதன்மை மூலமாக தற்கால அறிஞர்கள் மதிப்பிடுகின்றனர்.

"எலிகான் மலையில் கடவுளர்களின் நடனம்" - பெர்ட்டெல் தோர்வால்ட்சன் (1807). எசியோடு எலிகான் மலையில் இருந்தபோது கடவுளர்களின் அருளைப் பெற்றதாக குறிப்பிடுகிறார்.
Hesiodi Ascraei quaecumque exstant, 1701

மேற்சான்றுகள்

தொகு
  1. "Hesiod." Dictionary.com Unabridged. Random House, Inc. 5 April 2011. dictionary.com
  2. West, M. L. Theogony. Oxford University Press (1966), page 40
  3. Jasper Griffin, "Greek Myth and Hesiod", J.Boardman, J.Griffin and O. Murray (eds), The Oxford History of the Classical World, ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகப் பதிப்பகம் (1986), page 88
  4. J.P. Barron and P.E. Easterling, "Hesiod" in The Cambridge History of Classical Literature: Greek Literature, P. Easterling and B. Knox (eds), Cambridge University Press (1985), page 92
  5. Antony Andrewes, Greek Society, Pelican Books (1971), pages 254–5
  6. முரே ரோத்பார்ட், Economic Thought Before Adam Smith: Austrian Perspective on the History of Economic Thought, Vol. 1, Cheltenham, UK, Edward Elgar Publishing, 1995, pg. 8; Gordan, Barry J., Economic analysis before Adam Smith: Hesiod to Lessius (1975), pg. 3; Brockway, George P., The End of Economic Man: An Introduction to Humanistic Economics, fourth edition (2001), pg 128.

வெளி இணைப்புகள்

தொகு
 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
எசியோடு
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=எசியோடு&oldid=3881916" இலிருந்து மீள்விக்கப்பட்டது