டைதயோனசு அமிலம்

வேதிச் சேர்மம்

டைதயோனசு அமிலம் (Dithionous acid) என்பது H2S2O4.என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கந்தக ஆக்சோ அமிலம் ஆகும். தூய்மையான நிலையில் நிலைப்புத்தன்மை இல்லாமலும்[2], டைதயோனைட்டுகள் எனப்படும் இதன் உப்புகள் நிலைப்புத்தன்மையுடனும் காணப்படுகின்றன.

டைதயோனசு அமிலம்
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
டைதயோனசு அமிலம்
வேறு பெயர்கள்
ஐதரோசல்பூரசு அமிலம்; ஐப்போசல்புரசு அமிலம்
இனங்காட்டிகள்
15959-26-9 Y
ChEBI CHEBI:29253 Y
ChemSpider 22898 Y
InChI
  • InChI=1S/H2O4S2/c1-5(2)6(3)4/h(H,1,2)(H,3,4) Y
    Key: GRWZHXKQBITJKP-UHFFFAOYSA-N Y
  • InChI=1/H2O4S2/c1-5(2)6(3)4/h(H,1,2)(H,3,4)
    Key: GRWZHXKQBITJKP-UHFFFAOYAX
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 24490
  • O=S(O)S(=O)O
பண்புகள்
H2S2O4
வாய்ப்பாட்டு எடை 130.144 கி/மோல்
காடித்தன்மை எண் (pKa) 0.35, 2.45 [1]
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
| colspan=2 |  Y verify (இதுY/N?)

சி2 சமச்சீர் கட்டமைப்பில் இச்சேர்மம் காணப்படும் எனத் தொடக்கத்தில் ஊகிக்கப்பட்டது. H2S2O4 என்ற வாய்ப்பாடுள்ள HOS(=O)-S(=O)OH அமைப்பு அதிக நிலைப்புத்தன்மையை வெளிப்படுத்துகிறது. மூலக்கூறுகளிடையே ஐதரசன் பிணைப்பு இருக்கின்ற காரணத்தால், கணிப்பிய வேதியியல் முறையான ஏபி இனிசியோ கணக்கீட்டு[3] முறையை இது பயன்படுத்தப்படுகிறது. டைதயோனசு அமிலம் தன்னிச்சையாக SO2 மற்றும் S(OH)2 சேர்மங்களாகச் சிதைவடைகிறது என தற்பொழுது அறியப்பட்டுள்ளது.

சோடியம் டைதயோனைட்டு வெண்மை நிற தூளாகக் காணப்படுகிறது. ஒரு ஒடுக்கியாகவும் வெளுக்கும் முகவராகவும் இது பயன்படுத்தப்படுகிறது. கரிம வேதியியல் வினைகளில் நைட்ரோ குழுவை அமினோ குழுவாக மாற்றுவதிலும் இச்சேர்மம் பயன்படுத்தப்படுகிறது.

மேற்கோள்கள்

தொகு
  1. Catherine E. Housecroft; Alan G. Sharpe (2008). "Chapter 16: The group 16 elements". Inorganic Chemistry, 3rd Edition. பியர்சன். p. 520. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-13-175553-6.
  2. Drozdova, Yana; Steudel, Ralf; Hertwig, Roland H.; Koch, Wolfram; Steiger, Thomas (1998). "Structures and Energies of Various Isomers of Dithionous Acid, H2S2O4, and of Its Anion HS2O4- 1". The Journal of Physical Chemistry A 102 (6): 990. doi:10.1021/jp972658d. 
  3. Drozdova, Y.; Steudel, R.; Hertwig, R. H.; Koch, W.; Steiger, T. J. Phys. Chem. A 1998, 102, 990-996. DOI: 10.1021/jp972658d
"https://ta.wikipedia.org/w/index.php?title=டைதயோனசு_அமிலம்&oldid=2748143" இலிருந்து மீள்விக்கப்பட்டது