டைதயோனிக் அமிலம்
டைதயோனிக் அமிலம் (Dithionic acid) என்பது H2S2O6 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு வேதியியல் சேர்மமாகும். இச்சேர்மம் கரைசலாக மட்டுமே அறியப்படுகிறது [2].
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
டைதயோனிக் அமிலம் [1]
| |
வேறு பெயர்கள்
ஐப்போசல்பியூரிக் அமிலம்
| |
இனங்காட்டிகள் | |
14970-71-9 | |
ChEBI | CHEBI:29208 |
ChemSpider | 25128 |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 26985 |
| |
பண்புகள் | |
H2S2O6 | |
வாய்ப்பாட்டு எடை | 162.14 கி மோல்−1 |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
உப்புகள்
தொகுடைதயோனிக் அமிலம் இரட்டைப் புரோட்டான் வழங்கியாகும். இதனால் உருவாகும் உப்புகள் டைதயோனேட்டுகள் எனப்படுகின்றன. ஒரு புரோட்டான் இழந்து உருவாகும் அமில உப்புகள் ஏதும் அறியப்படவில்லை. டைதயோனேட்டு உப்புகள் அனைத்தும் நீரில் நன்கு கரைகின்றன [2]. இவ்வகை உப்புகள் மிதமான ஆக்சிசனேற்றிகளாகவும் மிதமான ஒடுக்கிகளாகவும் செயல்படுகின்றன. டைதயோனேட்டு அயனி ஈத்தேன் போன்ற வடிவத்தைக் கொண்டுள்ளது. ஆனால் இரண்டு SO3 குழுக்கள் கிட்டத்தட்ட மற்றைக்கப்பட்ட இணக்கத்தையே ஏற்றுள்ளன. S—S பிணைப்புகள் 2.15 Å நீளம் கொண்டுள்ளன. S—O பிணைப்புகள் 1.43 Å.நீளத்துடன் குறைவான நீளம் கொண்டுள்ளன.
தயாரிப்பு
தொகுஒரு சல்பைட்டை ஆக்சிசனேற்றம் செய்வதன் மூலமாக டைதயோனேட்டு தயாரிக்கப்படுகிறது. (அதாவது +4 என்ற ஆக்சிசனேற்ற நிலையிலிருந்து அவை +5 ஆக்சிசனேற்ற நிலைக்கு மாறுகின்றன) ஆனால் கந்தக டை ஆக்சைடின் குளிர்ந்த நீர்த்த கரைசலை மாங்கனீசு டை ஆக்சைடுடன் சேர்த்து ஆக்சிசனேற்றம் செய்து பேரளவில் டைதயோனேட்டு தயாரிக்கப்படுகிறது.
- 2MnO2 + 3SO2 → MnS2O6 + MnSO4
உருவாகும் மாங்கனீசு டைதயோனேட்டு கரைசல் பின்னர் இரட்டை இடப்பெயர்ச்சி வினை மூலம் டைதயோனேட்டு உப்புகளாக மாற்றப்படுகின்றன.
- Ba2+(aq) + MnS2O6(aq) + MnSO4(aq) → BaSO4(s)↓ + BaS2O6•2H2O(aq)
பேரியம் டைதயோனேட்டு கரைசலுடன் கந்தக அமிலத்தைச் சேர்த்து சூடுபடுத்துவதால் அடர்த்தியான டைதயோனிக் அமிலக் கரைசல் கிடைக்கிறது:
- BaS2O6(aq) + H2SO4(aq) → H2S2O6(aq) + BaSO4(s)↓
மேற்கோள்கள்
தொகு- ↑ RedBookRef|page=130
- ↑ 2.0 2.1 Greenwood, Norman N.; Earnshaw, Alan (1997). Chemistry of the Elements (2nd ed.). Butterworth-Heinemann. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0080379419. pp. 715-716