டைம்ஸ் சதுக்கம்

டைம்ஸ் சதுக்கம் (Times square) என்பது அமெரிக்காவின் நியூயார்க் மாநகரில் மன்ஹாட்டன் பெருநகரில் பகுதியில் உள்ள ஒரு வணிக மற்றும் பல்நோக்கு சதுக்கம் ஆகும். இது நியூயார்க் நகரின் பிரபலமான ''ப்ரோட்வே'' சாலையும் ஏழாவது அவென்யூவும் சந்திக்கும் சந்திப்பில் உள்ளது. இந்த சதுக்கம் 1904 ஆம் ஆண்டு வரை லாங்கேக்கர் சதுக்கம் என்று அழைக்கப்பட்டு வந்தது. நியூயார்க் மாநகரம் என்றவுடன் அனைவருக்கும் நினைவில் வரக்கூடிய இடமாக இந்த டைம்ஸ் சதுக்கம் இருக்கிறது. பல வண்ண மின்னொளிகளால் பிரகாசிக்கும் இந்த இடத்தில பல முக்கிய நிறுவனங்களின் தலைமை அலுவலகங்கள் அமைந்துள்ளன. மன்ஹாட்டன் பெருநகரபகுதியில் சுற்றலா பயணிகளால் அதிகம் விரும்பப்படும் இடமாக இந்த சதுக்கம் உள்ளது.

நியூயார்க் நகரின் பிரபலமான டைம்ஸ் சதுக்கம்

வரலாறு

தொகு
 
முன்பு இந்த இடம் லாங்கேக்கர் சதுக்கமாக அறியப்பட்டது

அமெரிக்கப் புரட்சிக்கு முன்னும், அதற்கு பின்னரும் இந்த இடம் ஜார்ஜ் வாஷிங்க்டன் கீழ் பணி புரிந்த ஜெனரல் ஜான் மொரின் ஸ்காட்டிற்கு சொந்தமாக இருந்தது [1].

20-ஆம் நூற்றாண்டு
தொகு

அமெரிக்காவின் பிரபல தி நியூயார்க் டைம்ஸ் நாளிதழ் 1904 ஆம் ஆண்டு தனது அலுவலகத்தை புதிதாக நிர்மாணிக்கப்பட்ட டைம்ஸ் கட்டிடத்திற்கு மாற்றிய நாள் முதல் இந்த இடத்திற்கு டைம்ஸ் சதுக்கம் என்ற பெயர் உண்டானது. அதற்கு முன்பு இந்த இடம் லாங்கேக்கர் சதுக்கமாக அறியப்பட்டது. அப்போது அமைந்த வானுயர்ந்த டைம்ஸ் கட்டிடத்தின் பெயரில் இந்த இடம் டைம்ஸ் ஸ்கொயர் என்று நியூயார்க் நகரவாசிகளால் அழைக்கப்பட்டது. பின்னர் வந்த காலங்களில் இந்த இடம் முக்கிய தருணங்களில் பொது மக்கள் கூடும் இடமாக மாறிவிட்டது. அமெரிக்கவாசிகளுடன் சுற்றுலா பயணிகளும் சேர்ந்து புத்தாண்டுக் கொண்டாட்டம், புதிய அதிபர்களின் பதவியேற்பு, வேர்ல்ட் சீரீஸ் என அனைத்து தருணங்களையும் இந்த சதுக்கத்தில் உள்ள ஜம்போட்ரான்களில் பார்த்து மகிழ்கின்றனர்.

அடையாளங்கள்

தொகு

கலை மற்றும் வணிகங்களின் சந்திப்பாக உள்ள இந்த சதுக்கத்தில் எப்போதும் மின்னிக்கொண்டிருக்கும் வண்ண விளக்குகளும் ஜம்போட்ரான்களில் ஓடிகொண்டிருக்கும் செய்திவரிகள் இவற்றுடன்,

  • ட்டி கே ட்டி எஸ் என அழைக்கப்படும் தள்ளுபடி டிக்கெட் விற்பனை மையம்
  • கோகோ கோலா பானத்தின் விளம்பரபலகை
  • பிரகாசிக்கும் நியான் விளக்குகள்

போன்றவை கவனத்தை ஈர்க்கும் காட்சிகள்.

டைம்ஸ் சதுக்கத்தில் உள்ள பிரபலமான கட்டிடங்கள்

தொகு
  • ஒன் டைம் ஸ்கொயர்
  • பிரில் பில்டிங்
  • தாமஸ் ராய்ட்டர் பில்டிங்
  • டைம்ஸ் ஸ்கொயர் டவர்
  • பேங்க் ஆப் அமெரிக்க டவர்
  • தி ஒரியன்
  • 5 டைம்ஸ் ஸ்கொயர்
  • 3 டைம்ஸ் ஸ்கொயர்

இங்குள்ள முக்கிய அலுவலகங்கள்

தொகு
  • எம்டிவி நெட்வொர்க்ஸ்
  • தி நியூயார்க் டைம்ஸ் கம்பெனி
  • ஓ'மெல்வெனி & மையர்ஸ்
  • தாமஸ் ராய்ட்டர் (செய்தி நிறுவனம்)

மேற்கோள்கள்

தொகு
  1. Ulam, Alex (June 2, 2008). "John Jacob Astor: The making of a hardnosed speculator | The Real Deal | New York Real Estate News". The Real Deal. Archived from the original on பிப்ரவரி 15, 2010. பார்க்கப்பட்ட நாள் April 21, 2010. {{cite web}}: Check date values in: |archive-date= (help)

வெளியிணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=டைம்ஸ்_சதுக்கம்&oldid=3930570" இலிருந்து மீள்விக்கப்பட்டது