டையூன் இடுலி

தாவர இனம்
டையூன் இடுலி
Chestnut Dioon
Dioon edule-IMG 9697.JPG
உயிரியல் வகைப்பாடு
திணை: தாவரம்
வகுப்பு: Cycadopsida
வரிசை: Cycadales
குடும்பம்: Zamiaceae
துணைக்குடும்பம்: Encephalartoideae
சிற்றினம்: Diooeae
பேரினம்: Dioon
இனம்: D. edule
இருசொற் பெயரீடு
Dioon edule
Lindl.[1]
வேறு பெயர்கள்
 • Dioon aculeatum
 • Dioon imbricatum
 • Dioon strobilaceum
 • Dioon strobilosum
 • 'Macrozamia littoralis
 • Macrozamia pectinata
 • Platyzamia rigida
 • Zamia maeleni

டையூன் இடுலி (Dioon edule) என்பது ஒரு தாவரமாகும். இது மெக்சிக்கோவைச் சேர்ந்தது. இது பால்மா டி லா வர்ஜன் என்றும் அழைக்கப்படுகிறது. இத்தாவரவகை மிக பழமையான விதை தாவரமாகும். இவைற்றின் புதைபடிவங்கள் டைனோசர் வாழ்ந்த காலத்திலேயே கிடைக்கின்றன.[2] இது Zamiaceae என்ற தாவரவியல் குடும்பத்தைச் சேர்ந்த்தாகும். இது Cycadales என்ற பேரினத்தைச் சேர்ந்தது.

இதில் இரண்டு கிளையினங்கள் உள்ளதாக அறியப்படுகிறது. அவை பின்வருமாறு,

 • Dioon edule subsp. augustifolium
 • Dioon edule subsp. edule

இந்த மரம்தான் உலகில் மிக மிக மெதுவாக வளரக்கூடிய மரமாகும். மெக்சிகோ நாட்டின் தேசியப் பூங்காவில் உள்ள ஒரு மரம் ஆறு அடி ஆறு அங்குலம் வளர 1000 ஆண்டுகள் எடுத்துக்கொண்டது. மெக்சிகோவிலிருந்து இதன் விதை கொண்டுவரப்பட்டு, ஏற்காடு தாவரவியல் பூங்காவில் 1990 இல் ஒரு கன்று உருவாக்கப்பட்டது. இது நடப்படுடு 25 ஆண்டுகள் ஆன நிலையிலும் சில அங்குல உயரம் மட்டுமே வளர்ந்துள்ளது. இந்தத் தாவரத்தின் அடிப்பாகம்கூட, இன்னமும் தரையைவிட்டு வெளியே வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.[3]

மேற்கோள்கள்தொகு

 1. In: Edwards's Botanical Register 29: misc. 59-60. 1843. "Name - Dioon Lindl". Tropicos. Saint Louis, Missouri: Missouri Botanical Garden. February 15, 2010 அன்று பார்க்கப்பட்டது. Annotation: as 'Dion' ; orth. & nom. cons.
  Type Specimen: Dioon edule Lindl.
 2. The United States Botanical Garden
 3. "ஏற்காட்டின் பசுமை அற்புதங்கள்". தி இந்து (தமிழ்). செப்டம்பர், 5, 2015. 25 ஏப்ரல் 2016 அன்று பார்க்கப்பட்டது. Check date values in: |date= (உதவி)
"https://ta.wikipedia.org/w/index.php?title=டையூன்_இடுலி&oldid=2056959" இருந்து மீள்விக்கப்பட்டது