டைரோபனோயிக் அமிலம்
டைரோபனோயிக் அமிலம் (Tyropanoic acid) என்பது C15H18I3NO3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். இச்சேர்மமும் இதனுடைய சோடியம் உப்பான சோடியம் டைரோபனோயேட்டும் கதிரியக்கப் படிமப் பெருக்கி முகவர்களாக பித்தப்பை வரைவியியலில் பயன்படுத்தப்படுகின்றன. பித்தப்பை வரைவியல் என்பது எக்சு கதிர் மூலம் பித்தப்பையில் உள்ள பித்தப்பைக் கல் நோயை ஆய்வுறுதி செய்யும் முறையாகும். பைலொபேக்கு, லுமொபேக்கு, டைரொபேக்கு, பிலொபேக் என்பன இதன் வர்த்தகப் பெயர்களாகும் [1]. இந்த மூலக்கூறில் மூன்று கனமான அயோடின் அணுக்கள் உள்ளன, அவை எக்சு - கதிர்களை எலும்புகளில் உள்ள கால்சியம் தடுத்து பிம்பம் உருவாக்குதலைப்போல அதேமுறையில் ஊடுறுவ விடாமல் தடுத்து பித்தப்பையின் பிம்பத்தை உருவாக்குகின்றன. உட்செலுத்தப்பட்டபின் இம்முகவர்கள் பித்தநீரில் விரைவாக வெளியேற்றப்படுகின்றன [2].
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
2-[(3-பியூட்டேனமிடோ-2,4,6-டிரையயோடோபீனைல்)மெத்தில்]பியூட்டனாயிக் அமிலம்
| |
வேறு பெயர்கள்
2-[[2,4,6-டிரையயோடோ-3-(1-ஆக்சோபியூட்டைலமினோ)பீனைல்]மெத்தில் பியூட்டனாயிக் அமிலம்
| |
இனங்காட்டிகள் | |
27293-82-9 | |
ChEMBL | ChEMBL1201261 |
ChemSpider | 5409 |
EC number | 248-389-8 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
KEGG | D01884 |
ம.பா.த | D014441 |
பப்கெம் | 5611 |
| |
UNII | 4F05V145YR |
பண்புகள் | |
C15H18I3NO3 | |
வாய்ப்பாட்டு எடை | 641.02 கி/மோல் |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
மேற்கோள்கள்
தொகு- ↑ "PubChem CID 5611".
- ↑ "Inhibition of hepatic binding of thyroxine by cholecystographic agents". J. Clin. Invest. 65 (5): 1032–40. May 1980. doi:10.1172/JCI109755. பப்மெட்:7364937.