தொராண்டோ பல்கலைக்கழகம்

(டொராண்ட்டோ பல்கலைக்கழகம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

தொராண்டோ பல்கலைக்கழகம் (University of Toronto) ஒரு அரச ஆய்வுப் பல்கலைக்கழகம். இது கனடாவில், ஒன்டாரியோ மாகாணத்தின், தொராண்டோ மாநகரில் அமைந்துள்ளது. 1827 ஆம் ஆண்டில் அமைக்கப்பட்ட இந்தப் பல்கலைக்கழகம் உலகின் சிறந்தவற்றில் ஒன்று. இதற்கு மூன்று வளாகங்கள் உள்ளன (சென். யோர்ச், ஸ்கார்பரோ, மிச்சசாகா). மருத்துவம், சட்டம், அறிவியல் ஆகிய துறைகளுக்கு இது சிறப்பாக அறியப்படுகிறது. இங்கு ஆயிரத்திற்கும் அதிகமான தமிழ் மாணவர்கள் பயில்கின்றனர். இன்சுலின், குருத்தணு, எதிர்மின்னி நுண்நோக்கி, பல்முனைத் தொடு இடைமுகம், கருந்துளை ஆகியவை இந்த பல்கலைக்கழகத்தில் கண்டுபிடிக்கப்பட்டவை.

இங்கு படித்த மாணவர்களில் சிலர் கனடிய ஆளுநர்களாகவும், கனடிய பிரதமர்களாகவும், நீதிபதிகளாகவும் பணியாற்றுகின்றனர். இங்கு படித்த பத்து மாணவர்கள் நோபல் பரிசை பெற்றுள்ளனர்.

கல்லூரிகளும் நிர்வாகமும்

தொகு

தொராண்டோ பல்கலைக்கழகத்தின் நிர்வாகம் சிலரை மையப்படுத்தியது அல்ல. தொடக்க காலத்தில் இருந்தே, நிர்வாகத்தை உறுப்புக் கல்லூரிகளும், பேராசிரியர்களும் பகிர்ந்துள்ளனர். [1] இந்த பல்கலைக்கழகத்தை நிர்வாகிக்கும் குழு ஓரவை முறைமை முறையைக் கொண்டது. இந்தக் குழுவே பல்கலைக்கழகத்திற்கான நிதி ஒதுக்கீடு உள்ளிட்ட அனைத்து விவகாரங்களிலும் தலையிட்டு, செயல்பாடுகளை மேற்கொள்ளும். [2] கனடாவின் முன்னாள் ஆளுநர்களில் ஒருவரோ, ஒன்ராறியோ மாகாண ஆளுநர்களில் ஒருவரோ பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக பதவியேற்பார். நிர்வாகக் குழுவைச் சேர்ந்தவர்களால் தலைவர் தேர்ந்தெடுக்கப்படுவார்.[2]

துறைகள்

தொகு
  • கலை, அறிவியல்
  • பயன்பாட்டு அறிவியல்
  • கட்டிடக்கலை, வடிவமைப்பு, நிலத்தோற்றம்
  • இசை
  • வனவியல்
  • தகவல்
  • மருத்துவம்
  • செவிலியர் பயிற்சி
  • மருந்தகவியல்
  • பல் மருத்துவம்
  • சட்டம்
  • மேலாண்மை

சான்றுகள்

தொகு
  1. Ross, Murray G. (April 1972). "The dilution of academic power in Canada: The University of Toronto Act". Minerva (Springer Netherlands) 10 (2): 242–258. doi:10.1007/BF01682420. 
  2. 2.0 2.1 வார்ப்புரு:Cite canlaw

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=தொராண்டோ_பல்கலைக்கழகம்&oldid=3248160" இலிருந்து மீள்விக்கப்பட்டது