டோக்கியோ கேமி பள்ளிவாசல்
டோக்கியோ கேமி பள்ளிவாசல் (Tokyo Camii Mosque) (東京ジャーミイ) ஜப்பான் நாட்டின் டோக்கியோவில் ஷிபுயா வார்டு ஒயாமா சோ மாவட்டத்தில் அமைந்துள்ள பள்ளிவாசல் ஆகும். இப்பள்ளிவாசல் கட்டிடத்துடன் துருக்கி கலாச்சார மையம் உள்ளது.இது டோக்கியோவின் மிகப்பெரிய பள்ளிவாசல் ஆகும்.[1][2]
டோக்கியோ கேமி பள்ளிவாசல் | |
---|---|
டோக்கியோ கேமி பள்ளிவாசல் | |
அடிப்படைத் தகவல்கள் | |
அமைவிடம் | டோக்கியோ, ஜப்பான் |
சமயம் | இசுலாம் |
அமைவிடம்
தொகுஇப்பள்ளிவாசல் ஜப்பான் நாட்டின் டோக்கியோவில் ஷிபுயா வார்டு ஒயாமா சோ மாவட்டத்தில் அமைந்துள்ளது. இது ஜப்பான் மிக பெரிய பள்ளிவாசல் ஆகும்.
வரலாறு
தொகுஇப்பள்ளிவாசல் முதலில் மே 12, 1938-ல் அருகிலமைந்த பள்ளிகூடத்துடன் இணைந்து கட்டப்பட்டது. அக்டோபர் புரட்சிக்குப் பிறகு ரசியா நாட்டில் இருந்து ஜப்பான் வந்து குடியேறிய பஷ்கிர் மற்றும் தத்தாரால் கட்டப்பட்டது. பள்ளிவாசலின் முதல் இமாம் அப்துல் ரசீது மற்றும் அப்துல் ஹை குர்பான் அலி ஆகியோரின் மேற்பார்வையில் கட்டப்பட்டது.
சீரமைப்பு பணிகள்
தொகு1986 ஆம் ஆண்டில், பள்ளிவாசலைக் கடுமையான சேதம் காரணமாக இடிக்க வேண்டியிருந்தது. தயந்த் இசுலேரி பசக்கலிங்கி வழிகாட்டுதல் மற்றும் மேற்பார்வையில் புதிய கட்டிடம் 1998 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. முகரம் இமி என்ற கட்டிடக்கலை நிபுணர் புதிய பள்ளிவாசலை கட்டினார். ஒட்டோமான் சமயக் கட்டிடக்கலையை அடிப்படையாக கொண்டது. சுமார் 70 துருக்கிய கைவினை கலைஞர்கள் கட்டினர் .பளிங்கு கற்கள் துருக்கி நாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டன. சுமார் 1.5 பில்லியன் யென் செலவில் கட்டுமானம் 2000 இல் முடிக்கப்பட்டது. புதிய பள்ளிவாசல் திறப்பு விழா ஜூன் 30, 2000 அன்று நடைபெற்றது. [3]
பரப்பளவு
தொகுடோக்கியோ கேமி பள்ளிவாசல் 734 சதுர மீட்டர் பரப்பளவில் அமைந்துள்ளது.மொத்த மாடி பரப்பளவு 1,477 சதுர மீட்டர் ஆகும்.குவிமாடம் 23.25 மீட்டர் உயரமும், ஆறு தூண்கள் ஆதரவுடன் உள்ளது.மினார் 41,48 மீட்டர் உயரம் உள்ளது. [4]
குறிப்பு
தொகுகேமி என்பது துருக்கிய மொழியில் இருந்து பெறப்பட்ட சொல் ஆகும்.இது அரபு மொழி வார்த்தை ஜாமி என்பதில் இருந்து பெறப்பட்டது.இது சபையைக் கொண்ட பள்ளிவாசல் என பொருள்படும்.
மேற்கோள்கள்
தொகு- ↑ http://www.nippon.com/en/features/c01301/
- ↑ Students visit Tokyo mosque The Japan Times.,JUN 3, 2016.
- ↑ “New Tokyo Mosque opens”, in: The Japan Times, July 1st, 2000.
- ↑ “Japan's largest mosque completed in Tokyo பரணிடப்பட்டது 2016-03-03 at the வந்தவழி இயந்திரம்”, in: Kajima News & Notes, Autumn 2000.
வெளி இணைப்புகள்
தொகு- பள்ளிவாசல் இணையதளம் - ஆங்கிலம் மற்றும் ஜப்பானிய மொழி.
- கட்டிடம் பற்றிய தகவல்கள்[தொடர்பிழந்த இணைப்பு] - ஜப்பானிய மொழி.