டோனா புரோகன்
டோனா ஜீன் புரோகன் ( Donna Jean Brogan ) (பிறப்பு: ஜூலை 12, 1939) ஒரு அமெரிக்க புள்ளியியல் நிபுணரும் மற்றும் எமரி பல்கலைக்கழகத்தில் புள்ளியியல் பேராசிரியரும் ஆவார். பெண்களின் உடல்நலம், மனநலம் மற்றும் உளவியல் சுகாதாரப் புள்ளிவிவரங்கள், மார்பகப் புற்றுநோயைப் பற்றிய புள்ளிவிவரங்கள் மற்றும் சிக்கலான கணக்கெடுப்புத் தரவுகளின் பகுப்பாய்வு ஆகிய துறைகளில் உயிரியல் புள்ளியியல் ஆராய்ச்சியில் பணியாற்றியுள்ளார்.
டோனா புரோகன் | |
---|---|
பிறப்பு | சூலை 12, 1939 மேரிலாந்தின் பால்ட்டிமோர் |
வேறு பெயர்கள் | டோனா ரூல் புரோகன் |
தேசியம் | அமெரிக்கர் |
துறை | புள்ளியியலாளர் |
பணியிடங்கள் | எமரி பல்கலைக்கழகம் |
கல்வி கற்ற இடங்கள் | கெட்டிஸ்பர்க் கல்லூரி புர்டூ பல்கலைக்கழகம் அயோவா மாநில பல்கலைக்கழகம் |
ஆய்வு நெறியாளர் | ஜோசப் செட்ரான்ஸ்கு |
ஆரம்ப வாழ்க்கை
தொகுஜூலை 12, 1939 இல் பிறந்த இவர் மேரிலாந்தின் பால்ட்டிமோரில், ஒரு தொழிலாளிகள் குடியிருப்பில் வளர்ந்தார். மேலும் தனது குடும்பத்தில் கல்லூரிக்குச் சென்ற முதல் நபர் ஆவார்.[1][2] 1960 இல் கெட்டிஸ்பர்க் கல்லூரியில் கணிதத்தில் பட்டம் பெற்றார், 1962 இல் புர்டூ பல்கலைக்கழகத்தில் புள்ளிவிவரத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார்.[3] ஜோசப் சென்ட்ரான்ஸ்கின் மேற்பார்வையின் கீழ் 1967 இல் அயோவா மாநில பல்கலைக்கழகத்தில் புள்ளியியல் துறையில் முனைவர் பட்டம் பெற்றார்.
பணிகள்
தொகு1971 இல், பபுரோகன் பெண்களுக்கான புள்ளியியல் குழுவை நிறுவினார். மேலும் புள்ளியியல் துறையில் அமெரிக்கப் பெண்களுக்கான புள்ளியியல் குழுவை நிறுவ உதவினார்.[4]
நான்கு ஆண்டுகள், வட கரோலினா பல்கலைக்கழகத்தின் பொது சுகாதார பள்ளியில் உதவி பேராசிரியராக இருந்தார். அங்கு மாதிரி ஆய்வு வடிவமைப்பு மற்றும் பகுப்பாய்வுகளில் நிபுணத்துவம் பெற்றார். பின்னர் 1970 இல், எமோரி மருத்துவப் பள்ளி பல்கலைக்கழகத்தில் இணை பேராசிரியராகவும், பின்னர் புள்ளியியல் மற்றும் மரபியல் துறையில் பேராசிரியராகவும் சேர்ந்தார். 1991-1994 க்கு இடையில், எமோரியில் மரபியல் புள்ளிவிவரப் பிவின் இயக்குநராக இருந்தார்.[5] பின்னர் எமரி பல்கலைக்கழகத்திலிருந்து 2004 இல் ஓய்வு பெற்றார்.
1975 ஆம் ஆண்டு முதல், மரபியல் புள்ளியியல் துறையில் குறிப்பாக முதன்மையாக சிக்கலான மாதிரி ஆய்வுகளின் வடிவமைப்பு மற்றும் பகுப்பாய்வின் சிறப்புப் பகுதியில் நிபுணராக பணியாற்றினார்,.
சொந்த வாழ்க்கை
தொகு1950கள் மற்றும் 1960களில் கணிதத்தில் ஒரு பெண்ணாக இருந்த இவர், நார்த் கரோலினா பல்கலைக்கழகத்தின் சேப்பல் ஹில் மற்றும் எமரி பல்கலைக்கழகத்தின் சமமற்ற இழப்பீடு மற்றும் டிகால்ப் கவுண்டி வாக்காளர் பதிவாளருடனான சட்டப் போராட்டம் உட்பட பல பாலின பாகுபாடு சம்பவங்களால் அவதிப்பட்டார்.
சார்லஸ் ரூல் என்பவரை மணந்து இரண்டு குழந்தைகளைப் பெற்றனர். இருப்பினும் இவர்களது மகன் குழந்தைப் பருவத்திலேயே இறந்துவிட்டான். பின்னர் இருவரும் விவாகரத்து செய்தனர்.
விருதுகளும் கௌரவங்களும்
தொகுஇவர் அமெரிக்க புள்ளியியல் சங்கத்தின் உறுப்பினராக உள்ளார். 1993 இல் எமரி பல்கலைக்கழகத்தின் தாமஸ் ஜெபர்சன் விருதை பெற்றார்.[6] மேலும் 2002 இல் அயோவா மாநில பல்கலைக்கழகத்தின் சிறப்புமிக்க முன்னாள் மாணவர் விருதும் வழங்கப்பட்டது. 1995 ஆம் ஆண்டில், அயோவா மாநில பல்கலைக்கழகம் தனது வளாகத்தில் இவரது பெயரை பொறித்தது.[7] இது சிறந்த பெண் பட்டதாரிகள் மற்றும் ஆசிரியர்களை கௌரவிக்கும் நிகழ்வாகும்.[2]
இவரது பணியை கௌரவிக்கும் வகையில் எமரி பல்கலைக்கழகத்தில் 2004 இல் "டோனா ஜே. புரோகன் உயிர்புள்ளியியல்" துறை நிறுவப்பட்டது.[5]
உசாத்துணை
தொகு- Gayle S Biehler, G Gorgon Brown, Rick L Williams, Donna Brogan. "Estimating Model-Adjusted Risks, Risk Differences, and Risk Ratios From Complex Survey Data." American Journal of Epidemiology. 171(5), 2010.
- Sherryl H Goodman, Donna Brogan, Mary Ellen Lynch and Brook Fielding. "Social and Emotional Competence in Children of Depressed Mothers." Child Development. 64(2), 1993.
- Cecil Slome, Donna Brogan, Sandra Eyres, and Wayne Lednar. "Basic Epidemiological Methods and Biostatistics: a Workbook." 1982. Wadsworth, Belmont, Cal.
சான்றுகள்
தொகு- ↑ "Challenging Sex Discrimination: Reflections over Seven Decades". American Statistical Association. Archived from the original on 20 September 2017.
- ↑ 2.0 2.1 "Donna Ruhl Brogan -". Plaza of Heroines, Iowa State University (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2018-11-21.
- ↑ "1996 Distinguished Alumna Donna Brogan". Purdue University - Department of Statistics (in ஆங்கிலம்). 1996. பார்க்கப்பட்ட நாள் 2018-11-21.
- ↑ "Donna Brogan". Rollins School of Public Health, Emory University.
- ↑ 5.0 5.1 "Donna J. Brogan Lecture in Biostatistics". Emory University. https://www.sph.emory.edu/departments/bios/calendar/brogan-lecture/index.html.
- ↑ "Emory University Thomas Jefferson Awardees". Emory University. Archived from the original on 14 October 2017.
- ↑ "Iowa State University Distinguished Alumni Award". Iowa State University. Archived from the original on 2 April 2017.