டோன்லூயா
மிசோராம் அரசியல்வாதி
டோன்லூயா (Tawnluia, பிறப்பு: 6 சூன் 1943) மிசோ தேசிய முன்னணியைச் சேர்ந்த இந்திய-மிசோரம் அரசியல்வாதி ஆவார். இவர் மிசோரம் மாநிலத்தின் துணை முதலமைச்சராக உள்ளார்.[1] [2]
டோன்லூயா Tawnluia | |
---|---|
மிசோரம் துணை முதலமைச்சர் | |
பதவியில் 15 திசம்பர் 2018 – 7 திசம்பர் 2023 | |
முன்னையவர் | லால் தன்ஃகாவ்லா (1986) |
தொகுதி | துய்ச்சாங் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 6 சூன் 1943 |
தேசியம் | இந்தியர் |
அரசியல் கட்சி | மிசோ தேசிய முன்னணி |
துணைவர் | லாழ்மிங்மாவீ |
1963 இல் மிசோ தேசிய முன்னணியில் இணைந்த இவர் கலைக்கப்பட்ட மிசோ தேசிய இராணுவத்தில் தளபதியாக[3] 20 ஆண்டுகளுக்கு மேலாகப் பணியாற்றியிருந்தார்.[4]
இவர் மிசோரம் சட்டப்பேரவையில் இருந்து மிசோ தேசிய முன்னணி உறுப்பினராக 1987, 1989, 1998, 2003 ஆகிய ஆண்டுகளில் தெரிவிவு செய்யப்பட்டிருந்தார். 2018 இல் துய்ச்சாங் தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார்.[5]
மேற்கோள்கள்
தொகு- ↑ "MNF's Zoramthanga Takes Oath as Chief Minister of Mizoram". thewire. பார்க்கப்பட்ட நாள் 25 June 2020.
- ↑ "Mizoram: Zoramthanga distributes portfolios among ministers". nenow. பார்க்கப்பட்ட நாள் 25 June 2020.
- ↑ Menon, Ramesh. "Anger over 1986 Mizoram accord failure". India Today. பார்க்கப்பட்ட நாள் 25 June 2020.
- ↑ "Peace Dividend in Mizoram". himalmag. பார்க்கப்பட்ட நாள் 25 June 2020.
- ↑ "Tuichang Assembly Election: MNF's Tawnluia won the battle". timesnownews. பார்க்கப்பட்ட நாள் 25 June 2020.