வெசிலின் தோப்பலோவ்

பல்கேரிய நாட்டு சதுரங்க ஜீயெம்
(டோப்பலோவ் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

வெசிலின் தோப்பலோவ் (Veselin Topalov, பி. 15 மார்ச் 1975), ஒரு பல்கேரிய நாட்டு சதுரங்க ஜீயெம் (grandmaster) ஆவார். பீடே உலக சதுரங்க தரவரிசையில் இரண்டாம் இடத்தில் இருப்பவர்;[1] உலக சதுரங்கப் போட்டி 2010-இல் இந்தியாவின் விசுவநாதன் ஆனந்த்தை எதிர்த்து போட்டியிட்டு தோல்வியுற்றார்.

வெசிலின் தோப்பலோவ்
முழுப் பெயர்வெசிலின் தோப்பலோவ்
(Веселин Топалов)
நாடு பல்கேரியா
பட்டம்கிராண்டு மாசுட்டர்
உலக வாகையாளர்2005–2006 (பிடே)
பிடே தரவுகோள்2812
உலகத் தரவரிசையில் இரண்டாமிடம்
உச்சத் தரவுகோள்2813 (அக்டோபர் 2006, சூலை 2009)

இவர் 2005- ஆம் ஆண்டு பீடே உலக சதுரங்கப் போட்டியில் வெற்றி பெற்று பீடே உலக சதுரங்க வாகையாளர் பட்டத்தைப் பெற்றார்; 2006-இல் நடந்த உலக சதுரங்கப் போட்டியில் விளாடிமிர் கிராம்னிக்கிடம் தோற்றதன் மூலம் அப்பட்டத்தை இழந்தார். 2005- ஆம் ஆண்டு சதுரங்க ஆஸ்கர் விருதைப் பெற்றார்.[2]

பீடே உலக சதுரங்க தரவரிசையில் அதிக நாட்கள் முதலிடத்தில் இருந்தவர்கள் பட்டியலில் காசுபரோவ், கார்ப்போவ், பாபி ஃபிசர் ஆகியோருக்கு அடுத்துள்ளார் (27 மாதங்கள்).

மேற்கோள்கள்

தொகு
  1. Veselin Topalov Ratings progress, FIDE
  2. "Chess Oscar 2005 for Veselin Topalov". ChessBase
"https://ta.wikipedia.org/w/index.php?title=வெசிலின்_தோப்பலோவ்&oldid=3938423" இலிருந்து மீள்விக்கப்பட்டது