உலக சதுரங்க வாகை 2010
(உலக சதுரங்கப் போட்டி 2010 இலிருந்து வழிமாற்றப்பட்டது)
நடப்பு உலக வாகையாளராகிய விசுவநாதன் ஆனந்திற்கும் பல்கேரியாவின் வெசிலின் தோப்பலோவிற்கும் இடையே 2010 ஏப்ரல் - மே வரை பல்கேரியா நாட்டின் தலைநகரான சோபியாவில் நடைபெற்ற உலக சதுரங்க வாகை 2010-இல் 6.5 - 5.5 என்ற புள்ளிக்கணக்கில் வெற்றி பெற்று உலக சதுரங்க வாகையாளர் பட்டத்தை ஆனந்த் தக்கவைத்துக் கொண்டார். இப்போட்டியின் பரிசுத்தொகை இரண்டு மில்லியன் யூரோக்கள். இந்த வெற்றியின் மூலம் ஆனந்த் நான்காவது முறையாக உலக சதுரங்க வாகையாளர் என்ற பெருமையைப் பெறுகிறார்.
விசுவநாதன் ஆனந்த் (இந்தியா) | வெசிலின் தோப்பலோவ் (பல்கேரியா) |
வாகையாளர் | போட்டியாளர் |
உலக சதுரங்கப் போட்டி 2008- இன் வெற்றியாளர் | 2009 போட்டியாளர் ஆட்ட வெற்றியாளர் |
55 வருடங்கள் | 49 வருடங்கள் |
2789 FIDE Rating [1] | 2812 FIDE Rating[1] |
பிடே உலகத் தரவரிசை: 4 | பிடே உலகத் தரவரிசை: 2 |
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 "Top 100 Players May 2010". FIDE. 2010-03-01. பார்க்கப்பட்ட நாள் 2010-03-01.