முதன்மை பட்டியைத் திறக்கவும்

வெசிலின் தோப்பலோவ்

வெசிலின் தோப்பலோவ் (Veselin Topalov, பி. 15 மார்ச் 1975), ஒரு பல்கேரிய நாட்டு சதுரங்க ஜீயெம் (grandmaster) ஆவார். பீடே உலக சதுரங்க தரவரிசையில் இரண்டாம் இடத்தில் இருப்பவர்;[1] உலக சதுரங்கப் போட்டி 2010-இல் இந்தியாவின் விசுவநாதன் ஆனந்த்தை எதிர்த்து போட்டியிட்டு தோல்வியுற்றார்.

வெசிலின் தோப்பலோவ்
Veselin Topalov Sofia Airport 24.10.2005.pic-01.jpg
முழுப் பெயர்வெசிலின் தோப்பலோவ்
(Веселин Топалов)
நாடு பல்கேரியா
தலைப்புகிராண்டு மாசுட்டர்
உலக சாம்பியன்2005–2006 (பிடே)
FIDE தரவுகோல்2812
உலகத் தரவரிசையில் இரண்டாமிடம்
எலோ தரவுகோள்2813 (அக்டோபர் 2006, சூலை 2009)

இவர் 2005- ஆம் ஆண்டு பீடே உலக சதுரங்கப் போட்டியில் வெற்றி பெற்று பீடே உலக சதுரங்க வாகையாளர் பட்டத்தைப் பெற்றார்; 2006-இல் நடந்த உலக சதுரங்கப் போட்டியில் விளாடிமிர் கிராம்னிக்கிடம் தோற்றதன் மூலம் அப்பட்டத்தை இழந்தார். 2005- ஆம் ஆண்டு சதுரங்க ஆஸ்கர் விருதைப் பெற்றார்.[2]

பீடே உலக சதுரங்க தரவரிசையில் அதிக நாட்கள் முதலிடத்தில் இருந்தவர்கள் பட்டியலில் காசுபரோவ், கார்ப்போவ், பாபி ஃபிசர் ஆகியோருக்கு அடுத்துள்ளார் (27 மாதங்கள்).

மேற்கோள்கள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=வெசிலின்_தோப்பலோவ்&oldid=2714246" இருந்து மீள்விக்கப்பட்டது