டோரிஸ் (கிரேக்கம்)
டோரிஸ் ( கிரேக்கம் : ἡ Δωρίς : எத். Δωριεύς , pl. Δωριῆς , Δωριεῖς ; இலத்தீன்: Dores , டோரியன்ஸ்) என்பது பண்டைய கிரேக்கத்தின் ஒரு சிறிய மலை மாவட்டமாகும். இது ஏட்டோலியா, தெற்கு தெசலி, ஓசோலியன் லோக்ரிஸ் மற்றும் போசிஸ் ஆகியவற்றால் சூழப்பட்டுள்ளது. இப்பகுதியானது டோரிய கிரேக்கர்களின் ஆதி தாயகமாகும். இது ஓட்டா மற்றும் பர்னாசஸ் மலைகளுக்கு இடையில் அமைந்துள்ளது. இது செபிசஸின் துணை ஆறான பிண்டஸ் ஆற்றின் பள்ளத்தாக்கைக் கொண்டுள்ளது. இது வெகு தொலைவு வரை பாய்கிறது. பிண்டஸ் இப்போது அப்போஸ்டோலியா என்று அழைக்கப்படுகிறது. [1]
டோரிஸ்
Δωρίς | |
---|---|
பண்டைய கிரேக்க பிராந்தியம் | |
மற்ற பகுதிகளுடன் தொடர்புடைய டோரிசைக் காட்டும் வரைபடம் | |
அமைவிடம் | நடு கிரேக்கம் |
பெரிய நகரங்கள் | டோரிக் டெட்ராபோலிஸ் |
பேச்சுவழக்குகள் | டோரிக் கிரேக்கம் |
நிலவியல்
தொகுகிரேக்க வரலாற்றாளர் எரோடோடசால் (viii. 31) மாலிசுக்கும் போசிசுக்கும் இடையில் டோரிஸ் இருப்பதாகவும், 30 ஸ்டேடியா அகலத்தில் இருப்பதாகவும் விவரித்தார். இது அதன் பரந்த பகுதியில் உள்ள அப்போஸ்டோலியாவின் பள்ளத்தாக்கின் பரப்பளவுடன் கிட்டத்தட்ட ஒத்துப்போகிறது. இந்த பள்ளத்தாக்கில் டோரிக் டெட்ராபோலிசை உருவாக்கும் நான்கு நகரங்கள் இருந்தன. அவை எரினியஸ், போயம், சைட்டினியம், பிண்டஸ், அக்கிபாஸ் என்று அழைக்கப்படுகின்றன. [2] இவற்றில் எரினியஸ், மிக முக்கியமானது, அது டோரியம் என்றும் அழைக்கப்படுகிறது. [3] எவ்வாறாயினும், டோரியன்கள் இந்த குறுகிய நிலப்பரப்புக்குள் தங்களைக் கட்டுப்படுத்திக் கொள்ளாமல் ஓட்டா மலையில் மற்ற இடங்களையும் ஆக்கிரமித்தனர்.
குறிப்புகள்
தொகு- ↑ Strabo ix. p. 427; William Martin Leake, Northern Greece, vol. ii. pp. 72, 92.
- ↑ Strabo x. p. 427.
- ↑ Aesch. de Fals. Leg. p. 286.