தகதர்த்தி

ஆந்திர பிரதேசத்தில் உள்ள ஒரு கிராமம், இந்தியா

தகதர்த்தி (Dagadarthi) என்பது இந்தியாவின் ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் உள்ள நெல்லூர் மாவட்டத்தில் இருக்கும் ஒரு மண்டலம் மற்றும் கிராமம் ஆகும்.[1]

தகதர்த்தி
Dagadarthi
கிராமம்
நாடு இந்தியா
மாநிலம்ஆந்திரப் பிரதேசம்
மாவட்டம்நெல்லூர்
வட்டம் (தாலுகா)தகதர்த்தி
மொழிகள்
 • Officialதெலுங்கு
நேர வலயம்இ.சீ.நே (ஒசநே+5:30)
நெல்லூர் மாவட்டம் தகதர்த்தியில் சாய் பாபா கோயில்

== புவியியல் அமைப்பு == 14° 42′ 28″ வடக்கு 79° 51′ 2″ கிழக்கு என்ற அடையாள ஆள்கூறுகளில் தகதர்த்தி கிராமம் பரவியுள்ளது.

வருவாய் பதிவுகள்தொகு

சொத்துகள் வாங்குதல் விற்பனை செய்தல் போன்ற நடவடிக்கைகள் நெல்லூர் மாவட்டத்தின் காவலி வருவாய் வட்டத்தில் பதிவு செய்யப்படுகின்றன. பதிவாளர் அலுவலகம் அல்லூர் கிராமத்தில் உள்ளது.

அரசியல்தொகு

காவலி சட்டப் பேரவைத் தொகுதியில் தகதர்த்தி இடம்பெற்றுள்ளது.

பொருளாதாரம்தொகு

விவசாயம் கிராம மக்களின் முக்கியமான முதல்நிலைத் தொழிலாக உள்ளது. மக்கள் தொகையில் 85 சதவீதத்தினர் விவசாயத்தில் ஈடுபடுகின்றனர். இதைத் தவிர்த்து இரண்டாம் நிலைத் தொழிலாக கணினி மென்பொருள் தொழில் இங்கு வளர்ந்து வருகிறது.

நீர்ப்பாசனம்தொகு

இம்மண்டலத்தின் விவசாய நிலங்கள் கனிகிரி நீர்த்தேக்கம் மூலமாக நீர்ப்பாசன வசதி பெறுகின்றன. சோமசீலா அணை மற்றும் நீர்த்தேக்கத்தில் இருந்து காவலி மற்றும் வடக்கு துரிமெரலா கால்வாய்கள் மூலமாக கனிகிரி நீர்த்தேக்கம் தண்ணீரைப் பெறுகிறது.

விமான நிலையம்தொகு

புதியதாக விமான நிலையம் கட்டுவதற்கு தகதர்த்தியில் சுமார் 2600 ஏக்கர் நிலப்பரப்பிலான இடம் கண்டறியப்பட்டுள்ளது.

மேற்கோள்கள்தொகு

  1. "List of Sub-Districts". Census of India. பார்த்த நாள் 2007-03-26.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தகதர்த்தி&oldid=2005625" இருந்து மீள்விக்கப்பட்டது