தகவல் மேலாண்மை மற்றும் பகுப்பாய்வு மையம்

தகவல் மேலாண்மை மற்றும் பகுப்பாய்வு மையம் (Information Management and Analysis Centre (IMAC), இந்தியக் கடற்படையின் ஒரு பகுதியாக இயங்கும் இவ்வமைப்பு 2014ம் ஆண்டு முதல் செயல்படுகிறது. இதன் தலைமையிடம் தில்லி அருகே உள்ள குருகிராம் நகரம் ஆகும். இவ்வமைப்பு இந்தியாவைச் சுற்றியுள்ள ஆழ் கடல் மற்றும் தீவுகளில் மேற்கொள்ளப்படும் தரவுகளை இணைப்பதற்கும், மேலாண்மை மற்றும் பகுப்பாய்வு செய்தவதற்கும் அதிகாரம் படைத்த அமைப்பாகும்.[1]

இவ்வமைப்பு இராணுவம் அல்லாத கப்பல் மற்றும் படகுகள் போக்குவரத்தை மட்டுமே கண்காணிக்கிறது. அதேசமயம் கடற்படை நடவடிக்கை இயக்குநரகம் மற்றொரு வகைப்படுத்தப்பட்ட வலையமைப்பில் இராணுவக் கப்பல்களைக் கண்காணிக்கிறது.[2] தேசிய கடல்சார் கள விழிப்புணர்வு மையமும் (NDMA) இத்துடன் இணைந்து செயல்படுகிறது.[1][2]

தகவல் மேலாண்மை மற்றும் பகுப்பாய்வு மையம், 26 நவம்பர் 2008 மும்பாய் தாக்குதல்களுக்குப் பின்னர் உருவாக்கப்பட்டது. 23 நவம்பர் 2014 அன்று பாதுகாப்பு அமைச்சர் மனோகர் பாரிக்கரால் தகவல் மேலாண்மை மற்றும் பகுப்பாய்வு மையம் துவக்கப்பட்டது.[3] இது தேசிய கட்டளைக் கட்டுப்பாட்டு தகவல் தொடர்பு மற்றும் புலனாய்வு வலையமைப்பின் (NC3I) மையமாகும், இது இந்திய கடற்படை மற்றும் கடலோர காவல்படையின் 51 செயல்பாட்டு மையங்களை இணைக்க நிறுவப்பட்டது. இது இந்தியத் தீவுப் பகுதிகள் உட்பட நாட்டின் கடற்கரை முழுவதும் பரவியுள்ளது. இவ்வமைப்பு ஆழ் கடல்களில் உள்ள கப்பல்களைக் கண்காணிக்கிறது மற்றும் கடலோர ரேடார்கள், வணிகக் கப்பல்களில் பொருத்தப்பட்ட தானியங்கி அடையாள அமைப்புகள் (AIS) டிரான்ஸ்பாண்டர்கள், விமானம் மற்றும் போக்குவரத்து மேலாண்மை அமைப்பு மற்றும் உலகளாவிய கப்பல் தரவுத்தளங்கள் ஆகியவற்றிலிருந்து தரவைப் பெறுகிறது.

தகவல் இணைவு மையம் - இந்தியப் பெருங்கடல் பகுதி

தொகு

தகவல் இணைவு மையம் - இந்தியப் பெருங்கடல் பகுதி (IFC-IOR), 2018-2019ல் இவ்வமைப்பு ஒரு பிராந்திய தகவல் ஒருங்கிணைப்பு அமைப்பாக அமைக்கப்பட்டது. இது 21 கூட்டாளர் நாடுகள் மற்றும் 22 பல தேசிய நிறுவனங்களுடன் ஒருங்கிணைக்கிறது. 2008 மும்பை தாக்குதலைத் தொடர்ந்து இத்தகைய கண்காணிப்பு மற்றும் தகவல் மேலாண்மை அமைப்பை அமைக்க வேண்டிய அவசியம் உணரப்பட்டது.பெரும்பாலான ஒருங்கிணைப்புகள் நடைமுறையில் செய்யப்பட்டாலும், தொடர்பு அதிகாரிகளில் அமெரிக்கா, பிரான்ஸ், ஜப்பான், ஆஸ்திரேலியா, ஐக்கிய இராச்சியம் மற்றும் சீசெல்சு ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்களும் அடங்குவர்.[4][5]

சவால்கள்

தொகு

2020ம் ஆண்டில், மும்பை தாக்குதலுக்கு 12 ஆண்டுகளுக்குப் பிறகும், சுமார் 60 சதவிகிதம் (சுமார் 1,50,000) சிறிய மீன்பிடிப் படகுகளுக்கு அடையாள அமைப்பு இல்லை என்று அறிக்கைகள் வெளிவந்ததுள்ளது.[6]

இதனையும் காண்க

தொகு

மேற்கோள்க்ள்

தொகு
  1. 1.0 1.1 Peri, Dinakar (2020-11-26). "Navy’s Information Management and Analysis Centre to become national maritime domain awareness centre" (in en-IN). The Hindu. https://www.thehindu.com/news/national/navys-imac-to-become-national-maritime-domain-awareness-centre/article33186731.ece. 
  2. 2.0 2.1 Kaushik, Krishn (2020-11-29). "Explained: Coastal security, after 26/11 Mumbai terror attacks". The Indian Express (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-11-29.{{cite web}}: CS1 maint: url-status (link)
  3. "Coastal Security Network Must Ensure Zero Tolerance to Error: Parrikar". pib.gov.in. பார்க்கப்பட்ட நாள் 2022-02-08.
  4. Ajai Shukla (2021-06-23). "To bolster security, Britain joins Indian Ocean monitoring hub in Gurgaon". Business Standard India. https://www.business-standard.com/article/current-affairs/to-bolster-security-britain-joins-indian-ocean-monitoring-hub-in-gurgaon-121062300015_1.html. 
  5. "Liaison officer from Seychelles posted at Indian Navy's Information Fusion Centre". The Economic Times. 25 October 2021. https://economictimes.indiatimes.com/news/defence/liaison-officer-from-seychelles-posted-at-indian-navys-information-fusion-centre/articleshow/87263731.cms. 
  6. "Challenge to coastal security persists, 150,000 small boats still lack electronic identity". The New Indian Express. பார்க்கப்பட்ட நாள் 2020-11-29.

வெளி இணைப்புகள்

தொகு