தகிட்டிய மொழிகள்

தகிட்டிய மொழிகள் என்பன, கிழக்குப் பொலினீசிய மொழிகளின் நடுக் கிழக்குக் கிளையைச் சேர்ந்த ஒரு மொழிக் குழுவுக்குள் அடங்கும் மொழிகளைக் குறிக்கும். ராப்பாத் தீவில் பேசப்படும் ராப்பா மொழிகளும், மார்க்கேசிய மொழிகளும் நடுக் கிழக்குக் கிளையைச் சேர்ந்த மற்ற இரண்டு மொழிக் குழுக்கள்.

தகிட்டியமும் நியூசிலாந்து மாவோரியும், பேசுவோர் தொகையின் அடிப்படையில், இக்குழுவில் உள்ள மிகவும் முக்கியமான மொழிகள். தகிட்டியம் சொசைட்டித் தீவுகளின் முதன்மை மொழியாக இருப்பதுடன், பிரெஞ்சுப் பொலினீசியாவின் பெரும் பகுதியின் பொது மொழியாகவும் விளங்குகிறது. மாவோரி மொழி நியூசிலாந்தின் குறிப்பிடத்தக்க சிறுபான்மை மொழியாகவும், ஆங்கிலத்தோடு இன்னொரு உத்தியோக மொழியாகவும் உள்ளது.

இக்குழுவில் உள்ள பிற மொழிகள்:

ஆசுத்திரல் மொழி
மோரியோரி மொழி
பென்ரின் மொழி
ராரோத்தொங்க மொழி
ரக்ககங்கா-மனிகிக்கி மொழி
துவாமோட்டு மொழி

வெளியிணைப்புக்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=தகிட்டிய_மொழிகள்&oldid=1678437" இலிருந்து மீள்விக்கப்பட்டது