கிழக்குப் பொலினீசிய மொழிகள்

கிழக்குப் பொலினீசிய மொழிகள் என்பன பசிபிக் தீவுகளில் வடக்கே அவாயில் இருந்து தென்மேற்கில் நியூசிலாந்து வரையும், தென்கிழக்கில் ஈசுட்டர் தீவு வரையும் உள்ள பகுதிகளில் பேசப்படும் 12 மொழிகளை ஒருங்கே குறிக்கும். இம்மொழிக் குழுவில், அவாய் மொழி, மார்க்கெசான் மொழி, துவாமோட்டு மொழி, தாகித்திய மொழி, நியூசிலாந்து மாவோரி மொழி, குக் தீவு மாவோரி மொழி, ராப்பா நூயி மொழி என்பன அடங்குகின்றன.

கிழக்குப் பொலினீசியம்
புவியியல்
பரம்பல்:
பொலினீசியத் தீவுகள்
மொழி வகைப்பாடு: ஆசுத்திரோனீசியம்
 மலாயோ-பொலினீசிய
  ஓசியானிய
   மைய பசிபிக்
    பொலினீசிய
     எல்லிசியம்–கிழக்கு?
      துவாலு–கிழக்கு?
       கிழக்குப் பொலினீசியம்
துணைப்பிரிவு:
மையக் கிழக்கத்திய மொழி

பேசுகின்ற மக்கள்தொகை அடிப்படையில் தாகித்திய மொழியும் மாவோரி மொழியும் இக்குழுவில் உள்ள இரண்டு முக்கியமான மொழிகள். தாகித்தியம் சொசைட்டி தீவுகளின் முதன்மை மொழியாக இருப்பதுடன் பிரெஞ்சு பொலினீசியாவின் பெரும்பகுதியில் தொடர்பு மொழியாகவும் காணப்படுகின்றது. அதே வேளை மாவோரி நியூசிலாந்தில் குறிப்பிடத்தக்க அளவு சிறுபான்மையினரால் பேசப்படுவதுடன், ஆங்கிலம், நியூசிலாந்து சைகை மொழி ஆகியவற்றுடன் ஒரு உத்தியோக மொழியாகவும் உள்ளது.