தகிரா சஃப்தார்

சயிதா தகிரா சஃப்தார் (Syeda Tahira Safdar உருது: سیدہ طاہرہ صفدر  ; பிறப்பு 5 அக்டோபர் 1957) ஒரு பாக்கித்தான் சட்ட நிபுணர் மற்றும் மேனாள் பலூசிஸ்தான் உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ஆவார்.

பாக்கித்தான் வரலாற்றில் அனைத்து வகையான நீதிமன்றங்களிலும் முதல் பெண் தலைமை நீதிபதி எனும் பெருமை பெற்றவர் ஆவார். பலூசிஸ்தான் உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இவர் நியமிக்கப்பட்டதை பாக்கித்தான் தலைமை நீதிபதி மியான் சாகிப் நிசார் 23 ஜூலை 2018 அன்று உறுதி செய்தார். மாகாண அளவில், 1982 இல் பலூசிஸ்தானில் முதல் பெண் குற்றவியல் நீதிபதி எனும் பதவி உட்பட தனது வாழ்க்கையில் பணியாற்றிய அனைத்து பதவிகளிலும் பதவியேற்ற முதல் பெண்மணி என்ற பெருமை இவருக்கு உண்டு.[1][2] இவருக்கு முன்பாக முகமது நூர் மெசுகன்சாய் தலைமை நீதிபதியாக இருந்தார். இவரருக்குப் பின்னர் ஜமால் கான் மண்டோகேல் பதவியேற்றார்.

ஆரம்பகால வாழ்க்கை மற்றும் கல்வி தொகு

இவர் அக்டோபர் 5, 1957 அன்று பாக்கித்தானின் குவெட்டாவில் பிறந்தார் இவரது தந்தை, சையத் இம்தியாஸ் உசைன் பக்ரி ஹனாபி, ஒரு வழக்குரைஞர். குவெட்டாவின் கன்டோன்மென்ட் பொதுப் பள்ளியில் தனது ஆரம்பக் கல்வியைப் பயின்ற இவர், குவெட்டாவின் அரசு பெண்கள் கல்லூரியில் இளங்கலை பட்டத்தையும் , பலூசிஸ்தான் பல்கலைக்கழகத்தில் உருது இலக்கியத்தில் முதுகலைப் பட்டத்தையும், 1980 இல் குவெட்டா பல்கலைக்கழக சட்டக் கல்லூரியில் சட்டப் பட்டத்தையும் பெற்றார்.[1][3]

நீதித்துறை வாழ்க்கை தொகு

1982 ஆம் ஆண்டில், பலூசிஸ்தானின் முதல் பெண் குற்றவியல் நீதிமன்ற நீதிபதியானார்.[2] இவர் பலூசிஸ்தான் பொது சேவை ஆணைய தேர்வில் வெற்றி பெற்றார். 1987 ஜூன் 29 அன்று மூத்த குற்றவியல் நீதிபதியாக பதவி உயர்வு பெற்றார். 1991 பிப்ரவரி 27 அன்று கூடுதல் மாவட்ட மற்றும் குற்றவியல் நீதிமன்ற நீதிபதியாகவும், பின்னர் 1 மார்ச் 1996 அன்று முழு அளவிலான மாவட்ட மற்றும் குற்றவியல் அமர்வு நீதிபதியாகவும் பதவி உயர்வு பெற்றார்.பின்னர், இவர் தொழிலாளர் நீதிமன்றத்திற்கும் தலைமை தாங்கினார். இவர் முதலில் 22 அக்டோபர் 1998 இல் உறுப்பினராகவும் பின்னர் பலூசிஸ்தான் சேவைகள் தீர்ப்பாயத்தின் தலைவராகவும் ஆனார்.10 ஜூலை 2009 இல் தலைவராகத் தேர்வானார்.[3] 2009 செப்டம்பர் 7 அன்று பலூசிஸ்தான் உயர்நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதியாக பதவி உயர்வு பெற்றார். 11 மே 2011 அன்று பலூசிஸ்தான் உயர்நீதிமன்றத்தின் நீதிபதியானார். 2012 இல், நெதர்லாந்து டென் ஹாக்கில் நடைபெற்ற ஒரு பயிற்சியில் இவர் கலந்து கொண்டார். அந்த பயிற்சியில், குற்றவியல் நடவடிக்கைகளில் சர்வதேச மனித உரிமைகள் தரங்களை பூர்த்தி செய்வது குறித்து "நீதிக்கான சர்வதேச சட்டம்" என்ற தலைப்பில் இவர் உரையாற்றினார். இவர் தனது நீதித்துறை வாழ்க்கை முழுவதும் சட்டம் என்ற தலைப்பில் பல சர்வதேச மாநாடுகளில் ஒரு பகுதியாக கலந்து கொண்டு வருகிறார். இவர் நிர்வாக குழு, பதவி உயர்வு குழு, விதிகள் மற்றும் இவற்றின் விவரங்களை ஆராயும் குழு ஆகியவற்றில் பணியாற்றியுள்ளார்.[4] 23 ஜூலை 2018 அன்று பலூசிஸ்தான் உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக உறுதி செய்யப்பட்டு, 1 செப்டம்பர் 2018 அன்று நீதிபதியாகப் பொறுப்பேற்றார்.[5][6] இந்த பதவியில் இருந்த இவர், பாக்கித்தானின் வரலாற்றில் அனைத்து வகையான நீதிமன்றத்தின் முதல் பெண் தலைமை நீதிபதி எனும் பெருமை பெற்றார்.[1][7]

முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் 19 நவம்பர் 2013 அன்று முன்னாள் சர்வாதிகாரி பர்வேஸ் முஷாரப்புக்கு எதிரான தேசத்துரோக வழக்கை விசாரிப்பதற்காக ஒப்புதல் அளித்த மூன்று பேர் கொண்ட சிறப்பு நீதிமன்றத்தின் ஒருவராகவும் இவர் இருக்கிறார்.[1][2][8]

சான்றுகள் தொகு

  1. 1.0 1.1 1.2 1.3 "Justice Tahira Safdar nominated as first female chief justice in Pakistan - The Express Tribune". tribune.com.pk. 23 July 2018. பார்க்கப்பட்ட நாள் 24 July 2018.
  2. 2.0 2.1 2.2 "Pakistan gets its first woman high court chief justice; Tahira Syeda Safdar to replace Mohammad Noor Muskanzai - Firstpost". www.firstpost.com. பார்க்கப்பட்ட நாள் 24 July 2018.
  3. 3.0 3.1 Bilal, Rana (23 July 2018). "Justice Tahira Safdar nominated as first woman chief justice of a Pakistani high court". dawn.com. பார்க்கப்பட்ட நாள் 24 July 2018.
  4. "Justice Syeda Tahira Safdar To Be The First Woman High Court Chief Justice In Pakistan - Live Law". livelaw.in. 24 July 2018. பார்க்கப்பட்ட நாள் 24 July 2018.
  5. "Pakistan appoints first woman to head Baluchistan high court". kansas.com. Archived from the original on 25 ஜூலை 2018. பார்க்கப்பட்ட நாள் 24 July 2018. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  6. "Balochistan to have first woman chief justice - Daily Times". dailytimes.com.pk. 1 September 2018. பார்க்கப்பட்ட நாள் 1 September 2018.
  7. Shah (1 September 2018). "Justice Tahira Safdar sworn in as first woman chief justice of a Pakistani high court". https://www.dawn.com/news/1430350. 
  8. "Musharraf could face death in treason case, says top Pak official - Firstpost". www.firstpost.com. பார்க்கப்பட்ட நாள் 24 July 2018.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தகிரா_சஃப்தார்&oldid=3930589" இலிருந்து மீள்விக்கப்பட்டது