தக்கர் பேரூ

இந்திய எழுத்தாளர்


தக்கர் பேரூ (Thakkar Pheru) அலாவுதீன் கில்சியின் நிதி நிர்வாகப் பொருளாளராக இருந்தாவராவார். இவர்  1291 ஆம் ஆண்டு முதல் 1347 ஆண்டு வரை இப்பணியில் செயல்பட்டார்.[1][2]

நாணயங்கள், உலோகங்கள் மேலும் ரத்தினங்கள் குறித்த சிறீமால் என்ற வல்லுநனராக அலாவுதீன் கில்சி இவரை நியமித்தார்.[3] தனது மகன் ஹேமபாலின் பயன்பாட்டுக்காக இத்துறை தொடர்பான நூல்களை எழுதியிருக்கிறார். 1315 இல் அலாவுதீன் கில்சிஜியின் கருவூலத்தில் தான் கண்ட அளப்பளரிய இரத்தின சேகரிப்புகளைக் பற்றி "இரத்தினப் பரிக்‌சா" என்ற நூலையும்"[4] 1318 ஆம் ஆண்டில் நாணயத் தயாரிப்பு ஆலையில் கிடைத்த அனுபங்களைக் கொண்டு "திரவியபரிக்சா" என்ற நூலையும் எழுதினார். கியாசுதீன் துக்ளக்கின் ஆட்சி வரை இவர் தொடர்ந்து பணியாற்றினார்.[5]

கணிதம் பற்றி இவர் எழுதிய "கணிதசாரகௌமுதி" என்ற நூலுக்காகவும் அறியப்படுகிறார்.[6]

மேற்கோள்கள் தொகு

  1. The Mathematics Student, Volumes 58-59, p. 247, இந்தியக் கணித சங்கம் (1990)
  2. Sreeramula Rajeswara Sarma, trans., with introduction, Sanskrit chāyā and commentary, Ṭhakkura Pherūʼs Rayaṇaparīkkhā: A Medieval Prakrit Text on Gemmology (Aligarh: Viveka, 1984).
  3. Itihas ki Amarbel Oswal, Mangilal Bhutoria
  4. Sreeramula Rajeswara Sarma, trans., with introduction, Sanskrit chāyā and commentary, Ṭhakkura Pherūʼs Rayaṇaparīkkhā: A Medieval Prakrit Text on Gemmology (Aligarh: Viveka, 1984): 21.
  5. ‘A Jain Assayer at the Sulṭān’s Mint’ in: Jayandra Soni (ed), Jaina Studies: Proceedings of the DOT 2010 Panel in Marburg, Germany, New Delhi, pp. 7-32.
  6. http://www.srsarma.in/pdf/mybooks/mybooks_reviews/R_GSK_Ikeyama.pdf
"https://ta.wikipedia.org/w/index.php?title=தக்கர்_பேரூ&oldid=3814811" இலிருந்து மீள்விக்கப்பட்டது