இந்தியக் கணித சங்கம்

இந்தியக் கணிதவியல் சங்கம் ( Indian Mathematical Society ) என்பது கணிதத்தில் ஆய்வை மேம்படுத்துவதற்காக உருவாக்கபட்ட இந்தியாவின் மிகப் பழமையான அமைப்பாகும். இந்தச் சங்கம் புனேவை தலைமையிடமாகக் கொண்டு 1907 ஏப்ரலில் வி. ராமசாமி ஐயரால் நிறுவப்பட்டது. இந்தச் சங்கம் தன் செயல்பாடுகளை அனலிட்டிக் கிளப் என்ற தற்காலிகப் பெயரில் தொடங்கியது. விரைவில் அப்பெயர் இந்திய கணிதக் கழகம் என மாற்றப்பட்டது. 1910 இல் புதிய சட்டதிட்டங்களை ஏற்றுக்கொண்ட பிறகு, சங்கம் அதன் தற்போதைய பெயரான இந்தியக் கணித சங்கம் என்ற பெயரைப் பெற்றது. சங்கத்தின் முதல் தலைவர் பி. அனுமந்த ராவ் ஆவார்.

இந்தியக் கணித சங்கம்
Indian Mathematical Society
உருவாக்கம்1907
தலைமையகம்புனே, மகாராட்டிரம், இந்தியா
தலைவர்
எஸ். டி. அதிகாரி
வலைத்தளம்https://www.indianmathsoc.org/

வெளியீடுகள்

தொகு

இந்த சங்கத்தால் இரண்டு காலாண்டு இதழ்கள் வெளியிடப்படுகின்றன.

  • தி ஜர்னல் ஆப் தி இண்டியன் மேத்தமெடிக்ஸ் சொசைட்டி ( JIMS: ISSN 0019-5839)
  • தி மேத்தமெடிக்ஸ் ஸ்டுடட் (Math Student: ( மேத்தமெடிக்ஸ் ஸ்டுடட் :

பன்னாட்டுத் தர தொடர் எண் 0025-5742  )

1911 ஜர்னல் தொகுதிகளில் இந்திய கணிதவியலாளர் சீனிவாச ராமானுசனின் ஆரம்பகால பங்களிப்புகள் இடம்பெற்றன. அது கேள்விகளின் தொகுப்பாக இருந்தது. சீனிவாச இராமானுசன் பங்களித்த சம் பிராப்பர்டிஸ் ஆப் பெர்னௌலி நம்பர்ஸ் [1][2] என்ற தலைப்பில் ஒரு பதினைந்து பக்க கட்டுரையும் அதே 1911 இதழ் தொகுதியில் வெளிவந்தது.

தி மேத்தமெடிக்ஸ் ஸ்டூடண்டில் பொதுவாக சங்கத்தின் வருடாந்திர மாநாடுகளில் நிகழ்த்தப்படும் உரைகள், விரிவுரைகள், வருடாந்திர மாநாடுகளில் சமர்பிக்கபட்ட ஆய்வுக் கட்டுரைகளின் சுருக்கங்கள் மற்றும் சங்கத்தின் வருடாந்திர மாநாடுகளின் செயல்திட்டங்கள், அத்துடன் ஆராய்ச்சி கட்டுரைகள் மற்றும் பிரபலமான கட்டுரைகள், புத்தக மதிப்புரைகள் போன்றவை இடம்பெறும்.

ஆண்டு மாநாடுகள்

தொகு

சங்கத்தின் முதல் ஆண்டு மாநாடு 1916 இல் மதறாசில் நடைபெற்றது. இரண்டாவது மாநாடு 1919 இல் பம்பாயில் நடைபெற்றது. அன்றிலிருந்து 1951 ஆம் ஆண்டு வரை இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு மாநாடு நடத்தப்பட்டுவந்தது. பின்னர் அது ஆண்டுக்கு ஒருமுறை மாநாட்டை நடத்த முடிவு செய்யப்பட்டது. இந்தியாவின் முதல் தலைமை அமைச்சரான ஜவகர்லால் நேருவால் 1959 ஆம் ஆண்டு அலகாபாத்தில் இருபத்தைந்தாவது மாநாடு நடைபெற்றது.

நினைவு விருது பேருரைகள்

தொகு

ஒவ்வொரு ஆண்டு மாநாட்டின் போதும், கல்வித் திட்டத்தின் ஒரு பகுதியாக பின்வரும் நினைவு விருது பேருரைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன:

  1. பி. எல். பட்நகர் நினைவு விருது பேருரை (1987 இல் நிறுவப்பட்டது).[3]
  2. சீனிவாச இராமானுசன் நினைவு விருது பேருவுரை (1990 இல் நிறுவப்பட்டது).[4]
  3. வி. ராமசுவாமி ஐயர் நினைவு விருது பேருவுரை (1990 இல் நிறுவப்பட்டது).[5]
  4. அன்ஸ்ராசு குப்தா நினைவு விருது பேருரை (1990 இல் நிறுவப்பட்டது).[6]
  5. கணேஷ் பிரசாத் நினைவு விருது பேருரை (1993 இல் நிறுவப்பட்டது மற்றும் ஒவ்வொரு ஆண்டும் நிகழ்த்தபடும்).[7]

இந்தியக்கணித சங்க பரிசுகள்

தொகு

பேராசிரியர் ஏ. கே. அகர்வால் விருது

தொகு

உலகின் எந்தப் பத்திரிக்கையிலும் வெளியான சிறந்த வெளியீட்டிற்காக ரூ 10,000 பரிசு.[8] முதன் முதலில் [9] பேராசிரியர் ஏ. கே. அகர்வால் விருது டாக்டர் நீனா குப்தாவுக்கு வழங்கப்பட்டது.

பி. எல். பட்நாகர் நினைவுப் பரிசு

தொகு

சர்வதேச கணித ஒலிம்பியாட் போட்டியில் அதிக புள்ளிகள் பெற்ற இந்திய அணிக்கு ஆண்டுதோறும் இந்தப் பரிசு வழங்கப்படுகிறது. இது ரூ. 1000/- பரிசு மற்றும் ஒரு சான்றிதழ். இந்திய கணிதவியல் சங்கத்தின் ஆண்டு மாநாட்டின் தொடக்க அமர்வின் போது இந்த விருது வழங்கப்படுகிறது.

ஆய்வுக் கட்டுரை சமர்பித்தலுக்கான பரிசுகள்

தொகு

சங்கம் அதன் ஆண்டு மாநாடுகளின் போது, ஆய்வுக் கட்டுரை சமர்பிக்கும் போட்டிக்கான சிறப்பு அமர்வை நடத்துகிறது. மேலும் பல்வேறு துறைகளில் சமர்பிக்கபட்ட சிறந்த ஆய்வுக் கட்டுரைகளுக்கு பரிசுகள் வழங்கப்படுகின்றன. கல்வி நிகழ்வின் ஒரு பகுதியாக இந்த சிறப்பு அமர்வு நடைபெறுகிறது.

  • இயற்கணிதம், வடிவியல், இடவியல், பரப்புருவியல், சார்பலன் பகுப்பாய்வு, வகையீட்டுக்கேத்திரகணிதம், பிரிநிலைக் கணக்கியல், எண்ணியல், செயல் உகமஆய்வியல், பாய்ம இயக்கவியல், கணினி அறிவியல் ஆகிய துறைகளில் சமர்பிக்கபடும் ஆய்வுக் கட்டுரைகளுக்கு ஆறு ஐ.எம்.எஸ் பரிசு.
  • இயற்கணிதம், சார்பலன் பகுப்பாய்வு, வகையீட்டு வடிவியல் ஆகிய பகுதிகளில் உள்ள கட்டுரைகளுக்கான ஏ.எம்.யு பரிசு .
  • தொகை கூறுபடுத்தல் ஆய்வுக் கட்டுரைகளுக்கு வி. எம் ஷா பரிசு .

சங்க அவை

தொகு

இந்திய கணித சங்கம் ஒரு அவையால் நிர்வகிக்கப்படுகிறது. அவைக சங்கத்தின் ஒன்பது அலுவலகப் பணியாளர்களை உள்ளடக்கியது.

இந்தியக் கணித சங்கத்தின் அவை: 2022- 2023
வ. எண். பதவி பெயர் இணைப்பு
1 தலைவர் எஸ். டி. அதிகாரி ராமகிருஷ்ணா மிஷன் விவேகானந்தா கல்வி ஆராய்ச்சி நிறுவனம், பெலுரே கொல்கத்தா
2 உடனடி முன்னாள் தலைவர் தீபேந்திர பிரசாத் இந்திய தொழில்நுட்ப நிறுவனம் பம்பாய், மும்பை
3 பொதுச்செயலர் சத்யா தியோ ஹரிஷ்-சந்திரா ஆராய்ச்சி நிறுவனம், பிரயாக்ராஜ்
4 நிர்வாக செயலாளர் பி. என். வாபரே சாவித்ரிபாய் பூலே புனே பல்கலைக்கழகம், புனே
5 கல்வித்துறை செயலாளர் ஜி. பி. ராஜசேகர் இந்திய தொழில்நுட்ப நிறுவனம், காரக்பூர்
6 பொருளாளர் எஸ். கே. நிம்போர்கர்]] டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் மராத்வாடா பல்கலைக்கழகம், அவுரங்காபாத், மகாராட்டிரம்
7 தலைமைப் பதிப்பாசிரியர் (தி ஜர்னல் ஆஃப் ஐஎம்எஸ்) பீயுஷ் சந்திரா முன்பு இந்திய தொழில்நுட்பக் கழகம் மும்பை
8 தலைமைப் பதிப்பாசிரியர் (மேத்தமெடிக்ஸ் ஸ்டூடண்டிர்) எம். எம். ஷிகாரே சாவித்ரிபாய் பூலே புனே பல்கலைக்கழகம், புனே
9 நூலகர் எம். பிச்சைமணி கணிதத்தில் மேம்பட்ட ஆய்வுக்கான இராமானுசன் கல்வி நிறுவனம், சென்னை

சங்கத்தின் தலைவர்கள்

தொகு

1907 – 1949

தொகு
1907-12 பி. அனுமந்த ராவ்
1912-15 ஆர். என். ஆப்தே
1915-15 இ. டபிள்யூ. மிடில்மாஸ்ட்
1915-17 ஆர். ராமச்சந்திர ராவ்
1917-21 ஏ. சி. எல். வில்கின்சன்
1921-26 ஹூன் பாலக்ராம்
1926-30 வி. ராமசுவாமி ஐயர்
1930-32 எம். டி. நாரணீங்கர்
1932-34 பி. வி. சேசு அய்யர்
1934-36 எச். ஜி. கர்புரே
1936-40 ஆர். பி. பரஞ்பே
1940-42 ராமசாமி எஸ். வைத்தியநாதசுவாமி
1942-47 ஃபிரெட்ரிக் வில்ஹெல்ம் லெவி
1947-49 எம். ஆர். சித்திக்கி

1949 – 1975

தொகு
1949-51 ஏ. நரசிங்க ராவ்
1951-53 டி. விஜயராகவன்
1953-57 ராம் பெஹர்
1957-59 வி. கணபதி ஐயர்
1959-60 பி. எஸ். மாதவ் ராவ்
1960-61 பி. என். பிரசாத்
1961-62 பி. எஸ். மாதவ் ராவ்
1962-63 சி. என். சீனிவாசியங்கர்
1963-64 அன்ஸ்ராஜ் குப்தா
1964-66 பிரபு லால் பட்நாகர்
1966-68 ஆர். எஸ். வர்மா
1968-69 பிரபு லால் பட்நாகர்
1969-70 இராம் பிரகாசு பம்பா
1970-71 எம். வெங்கட்ராமன்
1971-73 ஜே. என். கபூர்
1973-74 கே. ஜி. ராமநாதன்
1974-75 வி. கிருஷ்ணமூர்த்தி

1975 – 2000

தொகு
1975-77 பி. சி. வைத்யா
1977-79 யு. என். சிங்
1979-81 கே. வெங்கட்செலிஞ்சர்
1981-82 விஷ்ணு வாசுதேவ் நர்லிகர்
1982-84 ஆர். எஸ். மிஸ்ரா
1984-85 ஆர். பி. அகர்வால்
1985-86 எஸ். டி. சோப்ரா
1986-87 எச். சி. கரே
1987-88 வி. சிங்
1988-89 எம். கே. சிங்கால்
1989-90 எம். பி. சிங்
1990-91 வி. எம். ஷா
1991-92 டி. கே. சின்ஹா
1992-93 வி. கண்ணன்
1993-94 யு. பி. சிங்
1994-95 எச். பி. தீட்சித்
1995-96 என். கே. தாகரே
1996-97 எஸ். பார்கவா
1997-98 ஏ. ஆர். சிங்கால்
1998-99 பி. கே. லகிரி
1999-00 அனாதி சங்கர் குப்தா

2000 – 2015

தொகு
2000-01 சத்யா தியோ
2001-02 பி. வி. அருணாச்சலம்
2002-03 எம். ஏ. பதான்
2003-04 திருவேங்கடாச்சாரி பார்த்தசாரதி
2004-05 டி. திரிவிக்ரமன்
2005-06 சர்வஜித் சிங்
2006-07 இந்தர் பிர் சிங் பாசி
2007-08 ரவீந்திர பாபட்
2008-09 ஏ. கே. அகர்வால்
2009-10 பீயுஷ் சந்திரா
2010-11 ஆர். ஸ்ரீதரன்
2011-12 பி. கே. பானர்ஜி
2012-13 ஊசூர் எச். கான்
2013-14 கீதா எஸ். ராவ்
2014-15 எஸ். ஜி. டானி

2015 - தற்போதுவரை

தொகு
2015-16 ஏ. எம். மாத்தாய்
2016-17 டி. வி. பை
2017-18 மஞ்சுல் குப்தா
2018-19 சுதிர் கோர்படே
2019-20 எஸ். ஆறுமுகம்
2020-21 பி. சூரி
2021-22 தீபேந்திர பிரசாத்
2022-23 சுகுமார் தாஸ் அதிகாரி

இந்தியாவில் உள்ள பிற கணித சங்கங்களின் பட்டியல்

தொகு
  • அலகாபாத் கணித சங்கம் [1] [2]
  • பாரத கணித பரிஷ்த் (முன்னர், பனார்ஸ் கணிதவியல் சங்கம்) [3]
  • பீகார் கணித சங்கம் [4][தொடர்பிழந்த இணைப்பு][ <span title="Dead link tagged January 2020">நிரந்தர இறந்த இணைப்பு</span> ]
  • கல்கத்தா கணித சங்கம்
  • குஜராத் கணித சங்கம் [5] [6]
  • கேரள கணித சங்கம்
  • மராத்வாடா கணித சங்கம் (1999 இல் நிறுவப்பட்டது)[www.marathwadamathsociety.org/]
  • ஒரிசா கணித சங்கம் [7]
  • பஞ்சாப் கணித சங்கம் [8] பரணிடப்பட்டது 2011-01-12 at the வந்தவழி இயந்திரம்
  • ராஜஸ்தான் கணித பரிஷ்த் [9]
  • ராமானுஜன் கணித சங்கம்
  • திரிபுரா கணித சங்கம்
  • இந்தியாவின் விஞ்ஞான பரிஷத் [10]

குறிப்புகள்

தொகு
  1. Ramanujan, S. "Some properties of Bernoulli's numbers". பார்க்கப்பட்ட நாள் 18 June 2010.
  2. S. Ramanujan, Some properties of Bernoulli's numbers, J. Indian Math. Soc., (1911), vol. 3, p. 219-234
  3. "Professor P. L. Bhatnagar". Indian Mathematical Society. Archived from the original on 29 April 2019. பார்க்கப்பட்ட நாள் 19 June 2010.
  4. "Srinivasa Ramanujan". Indian Mathematical Society. Archived from the original on 26 மார்ச் 2010. பார்க்கப்பட்ட நாள் 19 June 2010. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  5. M. T. Naranienger. "V. Ramaswamy Aiyer : The Founder of IMS". Indian Mathematical Society. Archived from the original on 21 July 2011. பார்க்கப்பட்ட நாள் 19 June 2010.
  6. "Professor Hansa Raj Gupta". Archived from the original on 21 ஜூலை 2011. பார்க்கப்பட்ட நாள் 18 June 2010. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  7. "Ganesh Prasad : (1876 - 1935)". Indian Mathematical Society. Archived from the original on 25 October 2018. பார்க்கப்பட்ட நாள் 19 June 2010.
  8. "Terms and conditions for Prof. A. K. Agarwal award" (PDF). Archived from the original (PDF) on 2017-05-10.
  9. "Awards and Honours". Archived from the original on 2011-06-13. பார்க்கப்பட்ட நாள் 2013-07-01.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=இந்தியக்_கணித_சங்கம்&oldid=3927652" இலிருந்து மீள்விக்கப்பட்டது