கே. ஜி. ராமநாதன்

கொல்லகுன்ட கோபாலய்யர் இராமநாதன் (Kollagunta Gopalaiyer Ramanathan) (13 நவம்பர் 1920 – 10 மே 1992) ஒரு இந்திய கணிதவியலாளர் ஆவார். இவர் எண் கோட்பாடு தொடர்பான பணிக்காக நன்கு அறியப்படுகிறார். இவருடைய பங்களிப்புகள் இந்தியாவில் கணிதவியல் ஆய்வு மற்றும் கற்பித்தல் வளர்ச்சிக்கு பயன்பட்டுள்ளது.

கே. ஜி. இராமநாதன்
பிறப்பு13 நவம்பர் 1920
ஐதராபாத், பிரித்தானிய இந்தியாவின் மாகாணங்களும், ஆட்சிப் பகுதிகளும்
இறப்பு10 மே 1992 (71 வயது)
மும்பை, இந்தியா
குடியுரிமைஇந்தியாn
துறைஎண் கோட்பாடு
பணியிடங்கள்டாட்டா அடிப்படை ஆராய்ச்சி கழகம்
கல்வி கற்ற இடங்கள்பிரின்ஸ்டன் பல்கலைக்கழகம்
ஆய்வு நெறியாளர்எமில் ஆர்டின்
முனைவர் பட்ட 
மாணவர்கள்
சி. பி. இராமானுஜம்
கனகனஹள்றளி இராமச்சந்திரா
விருதுகள்பத்ம பூசண்
துணைவர்ஜெயலட்சுமி இராமநாதன்

கே. ஜி. இராமநாதனின் தொடக்க கால வாழ்க்கை மற்றும் குடும்பம்

தொகு

இவர் தென்னிந்தியாவில் ஐதராபாத்தில் பிறந்தார். இவர் தனது இளங்கலை மற்றும் முதுகலைபட்டத்தை முறையே உசுமானியா பல்கலைக்கழகம் மற்றும் சென்னைப் பல்கலைக்கழகம் ஆகிய நிறுவனங்களில் முடித்தார். பின்னர் இவர் பிரின்ஸ்டன் பல்கலைக்கழகம் சென்று தனது முனைவர் பட்டத்தை முடித்தார். இவரது முனைவர் பட்ட வழிகாட்டுநராக எமில் ஆர்ட்டின் இருந்தார். பிரின்ஸ்டனில் இவர் எர்மான் வெய்ல் மற்றும் கார்ல் சீகெல் ஆகியோருடனும் பணியாற்றினார். இதன் பின்னர் இவர் இந்தியா திரும்பிய பின் 1951 ஆம் ஆண்டில் மும்பையின் கொலாபாவில் உள்ள டாட்டா அடிப்படை ஆராய்ச்சி கழகத்தில் குமாரவேலு சந்திரசேகரன் என்பவருடன் இணைந்தார். பிரின்ஸ்டனில் இருந்த சற்றேறக்குறைய இரண்டாண்டு காலகட்டத்தில் இயற்பியல் மேதை ஆல்பர்ட் ஐன்ஸ்டைனின் அண்டை வீட்டுக்காரராக இருந்தார். இவர் ஐன்ஸ்டைனின் பொழுதுபோக்கிற்கு தியாகராஜரின் கர்நாடக இசைப்பாடல்களைப் பாடியதுண்டு.

இராமநாதன் ஜெயலட்சுமியை மணந்தார். இவர்களுக்கு இரண்டு மகன்கள் இருந்தனர். இவரது தந்தையின் பெயர் கொல்லகுன்டா கோபால் ஐயர் ஆவார். இவரது தாயாரின் பெயர் அனந்தலட்சுமி ஆவார். இவரது தாயார் இவரின் இளவயதிலேயே இறந்து விட்டார்.

விருதுகள்

தொகு

டாட்டா அடிப்படை ஆராய்ச்சி கழகத்தில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றிய காலத்தில் செய்த சாதனைகளுக்காக பல்வேறு விருதுகளைப் இராமநாதன் பெற்றுள்ளார். அவை:

மேற்கோள்கள்

தொகு
  1. "Padma Awards" (PDF). Ministry of Home Affairs, Government of India. 2015. Archived from the original (PDF) on 15 October 2015. பார்க்கப்பட்ட நாள் 21 July 2015.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கே._ஜி._ராமநாதன்&oldid=3512999" இலிருந்து மீள்விக்கப்பட்டது