தக்கலப்பள்ளி புருசோத்தம ராவ்

தக்கலப்பள்ளி புருசோத்தம ராவ் (Thakkalapalli Purushothama Rao) (பிறப்பு : 1937 மார்ச் 20) இவர் ஓர் இந்திய அரசியல்வாதியாவார். 1993 முதல் 1994 வரை ஆந்திர அரசின், சாலைகள், கட்டிடங்கள் மற்றும் துறைமுகங்களுக்கான அமைச்சராக இருந்தார். [1] தற்போது இவர் தொலைதூர உள்துறை பகுதி மேம்பாட்டுக்கான உயர் சக்தி குழுவின் தலைவராக உள்ளார். [2]

தக்கலப்பள்ளி புருசோத்தம ராவ்
தனிநபர் தகவல்
பிறப்பு 20 மார்ச்சு 1937 (1937-03-20) (அகவை 83)
வாரங்கல், ஐதராபாத் இராச்சியம்
அரசியல் கட்சி இந்திய தேசிய காங்கிரசு
இருப்பிடம் பஞ்சாரா மலைகள், ஐதராபாத்

ஆரம்பகால வாழ்க்கை மற்றும் அரசியல் வாழ்க்கைதொகு

இராவ் ஒரு பணக்கார அரச குடும்பத்தில் 1937 மார்ச் 20, அன்று ஐதராபாத் மாநிலத்தின் வாரங்கல் மாவட்டத்தின் கொங்கபகா கிராமத்தில் பிறந்தார். இருபத்தைந்து வயதில் இவர் வர்தனாபேட்டை சமிதியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர், வர்தனாபேட்டை தொகுதியில் இருந்து 4 மற்றும் 5 வது சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். [3] 1989இல் இவர் வாரங்கல் தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார். [4] 1969ஆம் ஆண்டில், ராவ் தெலங்காணா வரைபடத்தை மாநில சட்டசபையில் வெளியிட்டார். மேலும் இவர் 1969 தெலங்காணா இயக்கத்தின் போது தெலங்காணா முற்றிலும் பிரிந்ததற்கான காரணமாக இருந்தார். மேலும் இவர் மாணவர் கருத்துக்களை ஆதரித்தார். [5] 1972ஆம் ஆண்டில், எம். சிறீதர் ரெட்டியின் தலைமையில் எஸ்.டி.பி.எஸ்ஸைச் சேர்ந்த அனைத்து வேட்பாளர்களும் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டனர். இருப்பினும், திரு. ராவ் மட்டுமே வாரங்கல் மாவட்டத்தின் வர்தனாபேட்டை தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார். மீதமுள்ளவர்கள் தோற்கடிக்கப்பட்டனர். [6]

2004 ல் மாவோயிஸ்டுகளுடன் அமைதிப் பேச்சுதொகு

ஒய்.எஸ். ராஜசேகர ரெட்டியை மாவோயிஸ்டுகளுடன் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்த வற்புறுத்துவதில் ராவ் முக்கிய பங்கு வகித்தார். சமாதானப் பேச்சுவார்த்தைகளின் போது அரசாங்க பிரதிநிதியாகவும் இருந்தார். காந்திஜியின் கொள்கைகளை பரப்புவதற்காக இந்திய தேசிய காங்கிரசு கட்சி இவரை ஆந்திரப் பிரதேச காங்கிரசு குழுவின் காந்திபாதத்தின் தலைவராக்கியுள்ளது. அறிவார்ந்த வட்டங்களில் இவர் காந்திய மார்க்சிஸ்ட் என்று அழைக்கப்படுகிறார் [7]

டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் திறந்தநிலை பல்கலைக்கழகம் 2008 ஆம் ஆண்டில் இவர் சமூகத்திற்கு செய்த சேவைக்காக முனைவர் பட்டம் வழங்கியது.  

குறிப்புகள்தொகு

வெளி இணைப்புகள்தொகு