தங்கம்(II) சல்பேட்டு

வேதிச் சேர்மம்

தங்கம்(II) சல்பேட்டு (Gold(II) sulfate) Au2(SO4)2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். முன்னதாக இச்சேர்மம் AuIAuIII(SO4)2 என்ற ஒரு கலப்பு இணைதிறன் சேர்மமாக கருதப்பட்டது. ஆனால் பின்னர் இதில் Au4+2 என்ற ஈரணு நேர்மின் அயனியைக் கொண்டுள்ளதாக அறியப்பட்டது. இதுவே எளிய கனிம வேதியியல் தங்கம்(II) சேர்மங்களை உருவாக்கியது. ஈரணு நேர்மின் அயனியில் இடம்பெற்றுள்ள இரண்டு தங்கம் அணுக்களுக்கிடையிலான பிணைப்பு நீளத்தின் அளவு 249 பைக்கோ மீட்டர்களாகும். [1][2]

தங்கம்(II) சல்பேட்டு

தங்கம்(II) சல்பேட்டின் கட்டமைப்பு (சிவப்பு கோளங்கள்: Au; மஞ்சள் கோளங்கள்: S; நீலக் கோளங்கள்: O)
பெயர்கள்
வேறு பெயர்கள்
  • தங்கம் சல்ப்பேட்டு
  • இருதங்கம் இருசல்பேட்டு
இனங்காட்டிகள்
யேமல் -3D படிமங்கள் Image
  • [O-]S(=O)(=O)[O-].[Au+2]
பண்புகள்
Au2(SO4)2
வாய்ப்பாட்டு எடை 293.03 கி/மோல்
தோற்றம் சிவப்பு படிகங்கள்
அடர்த்தி 5.51 கி/செ.மீ3
கட்டமைப்பு
படிக அமைப்பு செஞ்சாய்சதுரம்
புறவெளித் தொகுதி Pbca
Lattice constant a = 854.9 பைக்கோமீட்டர், b = 824.9 பைக்கோமீட்டர், c = 1001.4 பைக்கோமீட்டர்
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

தயாரிப்பு

தொகு

தங்கம்(III) ஐதராக்சைட்டுடன் கந்தக அமிலத்தைச் சேர்த்து வினைபுரியச் செய்தால் தங்கம்(II) சல்பேட்டு உருவாகிறது.

தங்கம்(II) சல்பேட்டு காற்றில் நிலைப்புத்தன்மை அற்றதாகும். எனவே எளிதில் ஆக்சிசனேற்றம் அடைந்து ஐதரசன்டைசல்போ ஆரேட்டு(III) ஆக மாறுகிறது. [1]

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 Wickleder, Mathias S. (2001). "AuSO4: A True Gold(II) Sulfate with an Au24+ Ion". Journal of Inorganic and General Chemistry 627 (9): 2112–2114. doi:10.1002/1521-3749(200109)627:9<2112::AID-ZAAC2112>3.0.CO;2-2. 
  2. Wickleder, Mathias S. (2007). Devillanova, Francesco A. (ed.). Handbook of chalcogen chemistry: new perspectives in sulfur, selenium and tellurium. Royal Society of Chemistry. pp. 359–361. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-85404-366-8.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தங்கம்(II)_சல்பேட்டு&oldid=3327712" இலிருந்து மீள்விக்கப்பட்டது