தங்கம் அறுபுளோரைடு
வேதிச் சேர்மம்
தங்கம் அறுபுளோரைடு (Gold hexafluoride) என்பது AuF6 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் அடையாளப்படுத்தப்படும் கருத்தியல் ரீதியிலான ஒரு சேர்மமாகும்.[1] தங்கம் மற்றும் புளோரின் தனிமங்கள் சேர்ந்து ஓர் இரும சேர்மமாக இது உருவாகும். 2023 ஆம் ஆண்டு வரையிலும் இச்சேர்மம் இன்னும் ஓர் அனுமான சேர்மமாகவே அறியப்படுகிறது. இது வரை ஒருபோதும் தயாரிக்கப்படவில்லை அல்லது கவனிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.[2][3] "குறைந்த வெப்பநிலையில் தயாரிக்கப்பட்டு குளிர்ச்சியாக இருந்தால் இச்சேர்மம் நிலைத்து இருக்கும் என்று 1999 ஆம் ஆண்டில் நீல் பார்ட்லெட்டு கூறினார்.[4]
பெயர்கள் | |
---|---|
வேறு பெயர்கள்
தங்கம்(VI) புளோரைடு
| |
பண்புகள் | |
AuF6 | |
வாய்ப்பாட்டு எடை | 310.96 g·mol−1 |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
பண்புகள்
தொகுPtF6 போலவே AuF6 சேர்மமும் ஒரு சக்தி வாய்ந்த ஆக்சிசனேற்றியாக இருக்கும்.[5] இது நிலைப்புத்தன்மையுடன் காணப்படும் என்றும் கணக்கிடப்பட்டுள்ளது.[6]
மேற்கோள்கள்
தொகு- ↑ Compton, R. N.; Klots, Cornelius E. (1989). Iones, Molecules, and Energy (in ஆங்கிலம்). Oak Ridge National Laboratory . p. 169. பார்க்கப்பட்ட நாள் 2 May 2023.
- ↑ Groult, Henri; Leroux, Frederic; Tressaud, Alain (4 November 2016). Modern Synthesis Processes and Reactivity of Fluorinated Compounds: Progress in Fluorine Science (in ஆங்கிலம்). Elsevier. p. 563. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-12-803790-4. பார்க்கப்பட்ட நாள் 2 May 2023.
- ↑ Hargittai, Istvan; Hargittai, Magdolna (21 March 2003). Candid Science Iii: More Conversations With Famous Chemists (in ஆங்கிலம்). World Scientific. p. 47. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-78326-111-6. பார்க்கப்பட்ட நாள் 2 May 2023.
- ↑ Hargittai, Istvan (13 April 2010). Drive and Curiosity: What Fuels the Passion for Science (in ஆங்கிலம்). Prometheus Books. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-61614-469-2. பார்க்கப்பட்ட நாள் 2 May 2023.
- ↑ Craciun, Raluca; Picone, Désireé; Long, Rebecca T.; Li, Shenggang; Dixon, David A.; Peterson, Kirk A.; Christe, Karl O. (1 February 2010). "Third Row Transition Metal Hexafluorides, Extraordinary Oxidizers, and Lewis Acids: Electron Affinities, Fluoride Affinities, and Heats of Formation of WF6, ReFF6, OsF6, IrF6, PtF6, and AuF6" (in en). Inorganic Chemistry 49 (3): 1056–1070. doi:10.1021/ic901967h. பன்னாட்டுத் தர தொடர் எண்:0020-1669. பப்மெட்:20052991.
- ↑ Bartlett, Neil (26 October 2001). Oxidation Of Oxygen And Related Chemistry, The: Selected Papers Of Neil Bartlett (in ஆங்கிலம்). World Scientific. p. 201. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-981-4498-50-0. பார்க்கப்பட்ட நாள் 2 May 2023.