தங்க ஆலைடு

தங்கத்துடன் ஆலைடுகள் வினைபுரிந்து உருவாகும் சேர்மங்கள்

தங்க ஆலைடுகள் (Gold halides) என்பவை தங்கத்துடன் ஆலைடுகள் வினைபுரிந்து உருவாகும் சேர்மங்களைக் குறிக்கிறது.

மோனோ ஆலைடுகள்

தொகு

AuCl, AuBr, மற்றும் AuI போன்ற ஒற்றை ஆலைடுகள் -X-Au-X-Au-X-Au-X-.போன்ற மாற்று நேரியல் சங்கிலிகளைக் கொண்டிருக்கும் படிகத் திண்மங்களாகும். X-Au-X பிணைப்புகளுக்கு இடையே 180 பாகை கோண அளவு காணப்படுகிறது. [1].

ஒரும AuF மூலக்கூறு வாயுநிலையில் காணப்படுகிறது[2].

டிரை ஆலைடுகள்

தொகு

தங்க டிரையையோடைடு இயற்கையில் கிடைக்கவில்லை அல்லது நிலைப்புத்தன்மை அற்றதாக இருக்கலாம். தங்க(III) புளோரைடு (AuF3) தனித்துவமான பலபடி திருகுச்சுழல் கட்டமைப்பைப் பெற்றுள்ளது. மூலை-பகிர்வு {AuF4} சதுரங்களால் இக்கட்டமைப்பு ஆக்கப்பட்டிருக்கும்.

பெண்டா ஆலைடுகள்

தொகு

AuF5 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டைக் கொண்ட தங்கம்(V)புளோரைடு மட்டுமே தங்கம் +5 என்ற ஆக்சிசனேற்ற நிலையில் இருக்கும் சேர்மமாக அறியப்படுகிறது. பொதுவாக இது Au2F10 போன்ற இருபடி சேர்மமாகவே தோன்றும்.

மேற்கோள்கள்

தொகு
  1. Greenwood, Norman N.; Earnshaw, Alan (1997). Chemistry of the Elements (2nd ed.). Butterworth–Heinemann. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0080379419.
  2. D. Schröder; J. Hrušák; I. C. Tornieporth-Oetting; T. M. Klapötke; H. Schwarz (1994). "Neutral Gold(I) Fluoride Does Indeed Exist". Angewandte Chemie International Edition in English 33 (2): 212–214. doi:10.1002/anie.199402121. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=தங்க_ஆலைடு&oldid=3202979" இலிருந்து மீள்விக்கப்பட்டது