தங்க ஊசி தையல் பள்ளி
தங்க ஊசி தையல் பள்ளி (Golden Needle Sewing School) என்பது தாலிபான்களின் ஆட்சியின் போது, ஆப்கானித்தானின் எராத்து நகரிலுள்ள பெண்களுக்கான இரகசியப் பள்ளியாக இருந்தது. தலிபான்களால் அறிமுகப்படுத்தப்பட்ட கடுமையான இசுலாமிய சட்டத்தின் கீழ் பெண்கள் கல்வி கற்க அனுமதிக்கப்படாததால்[1] 1996களில் எராத்தின் இலக்கிய வட்டத்தைச் சேர்ந்த பெண் எழுத்தாளர்கள் 'எராத்தின் தையல் வட்டங்கள்' என்ற குழுவை அமைத்தனர். இது தங்க ஊசி தையல் பள்ளியை நிறுவியது.[2]
பெண்கள் வாரத்திற்கு மூன்று முறை பள்ளிக்குச் செல்வார்கள். வெளிப்படையாக தையல் பணியில் ஈடுபடுவார்கள். ஆனால் பெரும்பாலான நேரங்களில் எராத்து பல்கலைக்கழகத்தின் இலக்கியப் பேராசிரியர்கள் வழங்கும் பாடங்களைக் கேட்பார்கள். வெளியில் விளையாடும் குழந்தைகள் மதக் காவல்துறையினர் நெருங்கினால் குழுவை எச்சரிப்பார்கள். தங்கள் புத்தகங்களை மறைத்து தையல் உபகரணங்களை எடுக்க அவர்களுக்கு நேரம் கொடுப்பார்கள். எராத்தின் தையல் வட்டங்கள் என்ற நூலின் ஆசிரியர் கிறிஸ்டினா லாம்ப் கருத்துப்படி, தாலிபானின் கீழ் மிகவும் ஒடுக்கப்பட்ட பகுதியாக எராத்து இருந்திருக்கலாம். ஏனெனில் இது ஒரு பண்பட்ட நகரம், பெரும்பாலும் சியா இசுலாத்தைச் சேர்ந்தவர்கள் இருக்கும் நகரம். தாலிபான்கள் இந்த இரண்டையும் எதிர்த்தனர்.[2]
இவற்றையும் பார்க்கவும்
தொகுசான்றுகள்
தொகு- ↑ "The Taliban's War on Women" பரணிடப்பட்டது 2007-07-02 at the வந்தவழி இயந்திரம், Physicians for Human Rights, August 1998, accessed 29 July 2010.
- ↑ 2.0 2.1 Synovitz, Ron. "Afghanistan: Author Awaits Happy Ending To 'Sewing Circles Of Herat'", Radio Free Europe, March 31, 2004, accessed 29 July 2010. Also see Lamb, Christina. "Woman poet 'slain for her verse'", The Sunday Times, November 13, 2005.
மேலும் படிக்க
தொகு- Lamb, Christina. The Sewing Circles of Herat. HarperCollins, 2004.
- The Revolutionary Association of Women of Afghanistan, accessed 29 July 2010.