தஞ்சாவூர் நாகநாகேசுவரர் கோயில்
தஞ்சாவூர் நாகநாகேசுவரர் கோயில் தமிழ்நாட்டின் தஞ்சாவூரில் அமைந்துள்ள சிவன் கோயிலாகும்.
அமைவிடம்
தொகுஇந்தக் கோயில் தஞ்சாவூர்-கும்பகோணம் சாலையில் தஞ்சாவூரிலிருந்து 3 கிமீ தொலைவில் கருந்தட்டாங்குடியின் அருகே வெண்ணாற்றங்கரையில் அமைந்துள்ளது.
இறைவன், இறைவி
தொகுஇக்கோயிலில் உள்ள இறைவன் நாகநாகேசுவரர் என்றழைக்கப்படுகிறார். இறைவி வேதவல்லி ஆவார்.
அமைப்பு
தொகுசிறிய கோயிலான இக்கோயிலில் மூலவர் சன்னதிக்கு முன்பாக பலிபீடமும், நந்தியும் காணப்படுகின்றன. ஒரே திருச்சுற்றினையும், கருவறையையும் கொண்டுள்ள இக்கோயிலில் மூலவர் சன்னதிக்கு இடப்புறம் இறைவி சன்னதி உள்ளது. திருச்சுற்றில் ஞானசம்பந்தர், நாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர் ஆகிய நால்வர், வெற்றி விநாயகர், காசி விசுவநாதர், விசாலாட்சி, வள்ளி தெய்வானையுடன் கூடிய சுப்பிரமணியர், அன்னபூரணி, கஜலட்சுமி, ஆடல் அரசர், சிவகாமி ஆகியோரின் சன்னதிகள் காணப்படுகின்றன. கோயிலின் இடப்புறம் கால பைரவர் உள்ளார். கோஷ்டத்தில் தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், துர்க்கை ஆகியோர் உள்ளனர். அருகே சண்டிகேசுவரர் சன்னதி உள்ளது.
அருகிலுள்ள கோயில்கள்
தொகுஇக்கோயிலுக்கு மிக அருகில் கரந்தை ஆதீஸ்வரசுவாமி ஜினாலயம் எனப்படுகின்ற சமணக் கோயிலும் சித்தாநந்தீசுவரர் கோயில் எனப்படுகின்ற சிவன் கோயிலும் உள்ளன.