தட்சிண மூகாம்பிகா கோயில், வடக்கு பராவூர்
கேரளாவின் எர்ணாகுளம் மாவட்டத்தில் வடக்கு பராவூர் நகரில் உள்ள சரசுவதிக்கு அர்ப்பணிக்கப்பட்ட புகழ்பெற்ற கோயில் தட்சிண மூகம்பிகா கோயில் ஆகும். இந்த கோவிலில் தலைமை தெய்வம் சரசுவதி மற்றும் துணை தெய்வங்கள் கணபதி, சுப்ரமணியர், மகாவிட்டுணு, யட்சி, அனுமன் மற்றும் வீரபத்ரன். யட்சி தெய்வத்திற்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒரு சன்னதி தென்மேற்கு மூலையில் உள்ளது. கோவிலில் கருவறை தாமரைக் குளத்தின் நடுவே உள்ளது.
தட்சிண மூகம்பிகா கோயில், வடக்கு பராவூர் | |
---|---|
கோயில் வளாகத்தினுள் தாமரைக்குளம் | |
அமைவிடம் | |
அமைவு: | வடக்கு பராவூர், எர்ணாகுளம், கேரளா, இந்தியா |
ஆள்கூறுகள்: | 10°08′48″N 76°13′55″E / 10.146616°N 76.232001°E |
கோயில் தகவல்கள் | |
இணையதளம்: | www |
புராணங்களின்படி, பராவூரைச் சேர்ந்த தம்புரன் (ஆட்சியாளர்) மூகாம்பிகா தேவியின் சிறந்த பக்தர். அவர் ஒவ்வொரு ஆண்டும் மங்களூர் அருகில் உள்ள கொல்லூர் கோயிலுக்கு சென்று தெய்வத்திற்கு மரியாதை செலுத்துவார். வயது முதிர்வின் காரணமாக அவரது உடல்நிலை மோசமடைந்தது. எனவே, அவரால் கொல்லூருக்கு நீண்ட பயணத்தை மேற்கொள்ள முடியவில்லை. கொல்லூர் மூகாம்பிகை அரசரின் கனவில் தோன்றி அரண்மனைக்கு அருகில் தன்னுடைய சிலையை கட்டும்படி கட்டளையிட்டது. தம்புரன் தெய்வத்தின் அறிவுறுத்தலைப் பின்பற்றி, பராவூரில் இக்கோவிலைக் நிறுவினார்.
பண்டிகைகள்
தொகுபுகழ்பெற்ற நவராத்திரி திருவிழா இங்கு மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடப்படுகிறது. இங்கு நடைபெறும் "நவராத்திரி இசை" விழாவைக் காண ஆயிரக்கணக்கான மக்கள் திரள்கின்றனர். துர்காட்டமியில், சரசுவதி தேவியின் உருவத்திற்கு முன்பாக புத்தகங்கள் வைக்கப்படுகிறது. மேலும் விசயதசமியன்று காலையில், ஏசுதிரினிருத்து அல்லது வித்யாரம்ப விழா அதிகாலை 4 மணி முதல் முற்பகல் 11 மணி வரை சிறப்பாக நடைபெறுகிறது. ஆயிரக்கணக்கான சிறு குழந்தைகள் அரிசியால் அவர்களின் நாக்குகள் அல்லது மணல் ஆகியவற்றில் தங்க மோதிரத்துடன் "அரிசிரீ" என்ற வார்த்தையை எழுதி தங்களுடைய கல்வியினைத் தொடங்குகிறார்கள்.[1]
நவராத்திரி பண்டிகை தவிர, "பத்து நாள் ஆண்டு விழா" மகரம் மாதத்தில் (செனவரி - பிப்பிரவரி) கொண்டாடப்படுகிறது. இசை விழா மற்றும் வித்யராம்ப விழா ஆகியவை இந்தக் கோயிலின் முக்கிய அங்கங்கள் ஆகும்.
மேற்கோள்கள்
தொகு- ↑ "Vidyarambham held at Dakshina Mookambika". தி இந்து. 10 October 2008 இம் மூலத்தில் இருந்து 14 அக்டோபர் 2008 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20081014043441/http://www.hindu.com/2008/10/10/stories/2008101061220300.htm. பார்த்த நாள்: 20 June 2012.