தட்டைவாயன்

ஆண்டி வாத்து / தட்டை வாயன்
ஆண்
பெண்
உயிரியல் வகைப்பாடு
திணை:
Animalia
தொகுதி:
Chordate
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
துணைக்குடும்பம்:
பேரினம்:
Anas (disputed)
இனம்:
A. clypeata
இருசொற் பெயரீடு
Anas clypeata
லின்னேயசு, 1758
ஐரோப்பாவில் பரவல். வெளிர் பச்சை: வேனில் காலம். நீலம்: குளிர்காலம். அடர் பச்சை: வருடம் முழுவதும்.
வேறு பெயர்கள்

Spatula clypeata (but see text)

Spatula clypeata

தட்டைவாயன்[2] எனவும் அழைக்கப்படும் ஆண்டி வாத்து (Northern Shoveller - Anas clypeata) ஐரோப்பா, வட அமெரிக்காவிலும் ஆசியாவின் வட பகுதியிலும் இனப்பெருக்கம் செய்து குளிர்காலத்தில் தென் பகுதிகளுக்கு இடம்பெயரும் ஒரு வகை வாத்து. இது இந்தியாவில் அக்டோபர் முதல் ஏப்ரல் வரை இருந்து விட்டுப் பின் வலசை போகின்றது.

இனங்காண உதவும் களக் குறிப்புகள்

தொகு
  • தடித்த துடுப்பு போன்ற அலகு இவ்வாத்தை மற்றெல்லா இந்திய வாத்துகளிலிருந்தும் வேறுபடுத்துகிறது; அலகின் நுனி விரிந்து காணப்படும்.
  • முதிர்ந்த ஆண் வாத்தின் தலையும் கழுத்தும் அடர் பச்சை நிறத்தில் ஊதா கலந்து இருக்கும்; தோள்பட்டை செம்பழுப்பு நிறத்திலும் கால்கள் செம்மஞ்சள் (ஆரஞ்சு) நிறத்திலும் இருக்கும்.[3]

கள இயல்புகள்

தொகு

ஆண்டி வாத்துகள் தனியாகவோ இணையுடனோ சிறு கூட்டமாகவோ காணப்படுகின்றன; ஆகவே, பரவலாக இவை காணப்பட்டாலும் பிற வாத்துகளைப் போல் அதிக எண்ணிக்கையில் பெருங்கூட்டமாக இவற்றைக் காண இயலுவதில்லை. சேற்றுநீரை சலிப்பதற்கு ஏதுவாக இதன் அலகு உள்ளதால் (அலகின் உட்புறம் இருக்கும் சீப்பு போன்ற அமைப்புகள் - பற்கள் அன்று - சலித்தலை செய்கின்றன) சேற்றுநீரில் காணப்படும் நுண்ணிய வெளி ஓடுடைய கிளாடோசெரன்களையும் சிரோனிமிட் என்றொரு வகை நுண்புழுக்களையும் சலித்து உண்கின்றன[3].

மேற்கோள்கள்

தொகு
  1. BirdLife International (2012). Anas marecula. In: IUCN 2012. IUCN Red List of Threatened Species. Version 2012.2.
  2. Checklist of Birds of Tamil Nadu-M.A. Badshah
  3. 3.0 3.1 Popular Handbook of Indian Birds(1944)-Hugh Whistler-P. 534
"https://ta.wikipedia.org/w/index.php?title=தட்டைவாயன்&oldid=3187819" இலிருந்து மீள்விக்கப்பட்டது