தட்ப வெப்பத்தை மனிதன் மாற்ற முடியுமா? (நூல்)
தட்ப வெப்பத்தை மனிதன் மாற்ற முடியுமா? என்னும் தலைப்பில் 1976 இல் தமிழில் நியூ செஞ்சுரி புத்தக நிறுவனத்தாரால் வெளியிடப்பட்ட தமிழ் மொழிபெயர்ப்பு நூல். இந்நூல் ஆங்கிலத்தில் "Can Man Change the Climate?" என்னும் தலைப்பில் பி. போரிசோவ் (P. Borisov) எழுதி, உருசியாவில் மாசுக்கோவைச் சேர்ந்த புரோகிரசு வெளியீட்டாரால் (Progress Publishers, Moscow) வெளியிடப்பட்டது. இதன் தமிழ் ஆக்கத்தை சி. நல். வைத்தீர்ஸ்வரன் என்னும் வைத்தண்ணா அவர்கள் மொழி பெயர்த்துள்ளார்கள்.
தட்ப வெப்பத்தை மனிதன் மாற்ற முடியுமா? | |
---|---|
நூல் பெயர்: | தட்ப வெப்பத்தை மனிதன் மாற்ற முடியுமா? |
ஆசிரியர்(கள்): | பி. போரிசோவ் P. Borisov தமிழாக்கம்: சி.நல். வைத்தீஸ்வரன் (வைத்தண்ணா) |
வகை: | அறிவியல் (பொது) |
துறை: | அறிவியல் கோட்பாடுகள் |
காலம்: | 1976 |
இடம்: | சென்னை, இந்தியா |
மொழி: | முதல் நூல் ஆங்கிலம், மொழிபெயர்ப்பு தமிழ் |
பக்கங்கள்: | 218 |
பதிப்பகர்: | நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பிரைவேட் லில். |
பதிப்பு: | 1976 |
ஆக்க அனுமதி: | - |
இந்நூல் பொதுமக்கள் புரிந்துகொள்ளும் வகையில் தட்பவெப்ப நிலைகளைக் கட்டுப்படுத்தும் புவியியல் சூழல்களை பற்றிச் செறிவான தகவல்களுடன் எழுதப்பட்டுள்ளது. பல படங்களுடனும் அட்டவணைகளுடனும் நிறைய தகவல்களைத் தருகின்றது. இந்நூலில் 218 பக்கங்கள் உள்ளன. நூலின் இறுதியில் இந்நூலுக்குத் துணைசெய்த 53 ஆய்வுக்கட்டுரைகளுக்கும் நூல்களுக்கும் சுட்டிகள் உள்ளன. இந்நூலின் பொருளடக்கத்தில் உள்ளவை:
- முன்னுரை
- தட்பவெப்ப நிலையில் உள்ள சிக்கல்கள்
- சேமைப் பழங்காலத்தில் தட்ப வெப்பநிலை
- அண்மைப் பழங்காலத் தட்ப வெப்பம்
- மிக நெருங்கிய கடந்த கால தட்ப வெப்ப நிலைகள்
- ஆர்ட்டிக் மண்டலம் தற்காலத்தில் வெப்பமாதல்
- தட்ப வெப்பத்தில் ஏற்படும் மாற்றங்களுக்குக் காரணங்கள்
- தட்ப வெப்ப மாறுதலின் விதிகள்
- தட்பவெப்பம் உருவாவதில் உலக மாபெருங் கடலும் கடல் நீரோட்டமும் கொண்டுள்ள பங்கு
- தட்ப வெப்ப நிலையில் உலக மண்டல சீர்திருத்தங்கள் கருத்துகளின் முன்னேற்றம்
- துருவ குடா நீரோட்டம் சாத்தியமா?
- ஆர்ட்டிக் பேசினில் ஒரு வளைகுடா நீரோட்டம்
- தட்ப வெப்ப சகாயங்களில் முதல் கட்டங்கள்
- நடைமுறையில் கொண்டு வருகையில் சில பிரச்சினைகள்
- தட்ப வெப்ப அனுகூலங்களில் இன்னும் எதிர்கால நன்மைகள்
- முடிவுரை
- LITERATURE