தணிகாச்சலம் சடகோபன்

இந்திய இதயநோய் மருத்துவர்

தணிகாச்சலம் சடகோபன் (Thanikachalam Sadagopan) ஓர் இதயநோய் மருத்துவர் ஆவார். இவர் சிறீ இராமச்சந்திரா மருத்துவப் பல்கலைக்கழக, மருத்துவக் கல்வித் துறையின் [1] முன்னாள் துணைவேந்தராக பணியாற்றியுள்ளார்[2]. சிறீ ராமச்சந்திரா பல்கலைக்கழகத்தின் தலைவர் பதவியிலும், இதய பராமரிப்பு மையத்தின் இயக்குனராகவும் சென்னை, இந்தியத் தொழில்நுட்பக்கல்வி நிறுவனத்தின் பயன்முறை இயந்திரவியல் துறையில் உயிர் மருத்துவப் பொறியியல் பிரிவில் இணை பேராசிரியராகவும் பணியாற்றியுள்ளார். இதய நோய்கள் தடுப்பு, ஆராய்ச்சியில் ஈடுபட்டு இப்பொருள் தொடர்பாக பல கட்டுரைகளை வெளியிட்டுள்ளார். தோல் நோய்களுக்குச் சிகிச்சையளிக்கப் பயன்படுத்தப்படும் ”நுனா கடுகு” என்ற சித்த மருந்து பற்றிய ஆய்வுகள் மேற்கொண்டார்[3][4] . டஃப்சு பல்கலைக்கழகப் பள்ளியின் நோய் விபரவியல் ஆய்வு உள்ளிட்ட பல பன்னாட்டு பன்மைய மருந்துச் சோதனைகளிலும் இவர் ஈடுபட்டார்.[5] இந்திய மருத்துவக் கழகம் மருத்துவத் துறைக்காக வழங்கும் மிக உயரிய விருதான மரு. பி. சி. ராய் விருது இவருக்கு வழங்கப்பட்டது[2]. மருத்துவத்துறையில் இவர் ஆற்றிய சீரிய பணிக்காக 2009 ஆம் ஆண்டு இந்திய அரசாங்கம் இவருக்கு நான்காவது உயரிய விருதான பத்மசிறீ விருதை வழங்கி கௌரவித்துள்ளது.[6]

தணிகாச்சலம் சடகோபன்
Thanikachalam Sadagopan
பிறப்பு23 அக்டோபர் 1951 (1951-10-23) (அகவை 72)
தமிழ்நாடு, இந்தியா
பணிஇதயநோய் மருத்துவர்
அறியப்படுவதுஇதய நோய்கள் தடுப்பு
விருதுகள்பத்மசிறீ
மரு. பி. சி. ராய் விருது
வலைத்தளம்
Website

மேற்கோள்கள் தொகு

  1. "Dr. S.Thanikachalam on IITM". IIT Madras. 2016. பார்க்கப்பட்ட நாள் February 25, 2016.
  2. 2.0 2.1 "Speakers". Tufts University School of Medicine. 2016. Archived from the original on மார்ச் 4, 2016. பார்க்கப்பட்ட நாள் February 25, 2016. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  3. "Sadagopan Thanikachalam on Sciencescape". Sciencescape. 2016. Archived from the original on மார்ச் 5, 2016. பார்க்கப்பட்ட நாள் February 25, 2016. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  4. Mohan Thanikachalam; Abirami Swaminathan; Jahnavi Sunderarajan; Vijaykumar Harivanzan; Sadagopan Thanikachalam (2014). "Epidemiology and Prevention of CV Disease: Physiology, Pharmacology and Lifestyle". American Heart Association. http://circ.ahajournals.org/content/130/Suppl_2/A15897.abstract. 
  5. Ramaswamy Selvaratnam, Nettam Prathyusha, Ruthiramoorthi Saranya, Haridass Sumathy, Kutuva Tulasi Mohanavalli, Raju Jyothi Priya, Jayakothanda Ramaswamy Venkhatesh, Chidambaram Saravana Babu, Kumarasamy Manickavasakam, and Sadagopan Thanikachalam (2012). "Acute toxicity and the 28-day repeated dose study of a Siddha medicine Nuna Kadugu in rats". BMC Complement Altern Med. 12: 190. doi:10.1186/1472-6882-12-190. http://pubmedcentralcanada.ca/pmcc/articles/PMC3488310/. 
  6. "Padma Awards" (PDF). Ministry of Home Affairs, Government of India. 2016. Archived from the original (PDF) on நவம்பர் 15, 2014. பார்க்கப்பட்ட நாள் January 3, 2016.

இவற்றையும் காண்க தொகு

புற இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=தணிகாச்சலம்_சடகோபன்&oldid=3557047" இலிருந்து மீள்விக்கப்பட்டது