தண்டம்பட்டு நடுகல்

முதலாம் மகேந்திரவர்மனின் 18-வது ஆட்சியாண்டில், மேல் வேணாட்டில் ஆந்தைப்பாடி என்னும் ஊரை ஈசைப் பெரும்பானரசர் என்னும் வாணரக் குல அரசனின் மருமகனாகிய பொற்சேந்தியார் என்பவர் ஆண்டு வந்தார். இப்பேரரசனின் சேவர்கள் (தண்டம்பட்டில் இருந்த) ஆதிநிரைகளைக் கவர்ந்தனர். ஆதிநிரைகளை மீட்பதற்கு நடந்த போரில் வேணாட்டினைச் சேர்ந்த 'நந்தியார்' என்பவன் வீரமரணம் அடைந்தான். இந்த நந்தியாருக்காக நடப்பட்ட நடுகல் தண்டப்பட்டு நடுகல் எனப்படுகிறது[மேற்கோள் தேவை].

நடுகல்லின் இதன் அமைப்பு தொகு

வலது கையில் குறுவாளும் இடது கையில் வில்லும் கொண்ட ஒரு வீரனின் உருவம் நடுகல்லில் உள்ளது. இந்த உருவத்தின் இடது பக்கத்தில் இக்கல்வெட்டு உள்ளது. இது வட்டெழுத்துக் கல்வெட்டின் வகையைச் சேர்ந்ததாகும்.

கல்வெட்டின் முதன்மை படிவம் தொகு

கோவிசைய மயீந்திரவருமற்கு பதில் எட்டாவது வேணாட்டு ஆந்தைப்பாடி ஈசை பெரும்பாணரைசரு மருமக்கள் பொற்சேந்தியாரு சேவகரு கண்ட ஞான்று மீட்டு பட்டான் நாந்தியார் கல்க.


கல்வெட்டின் திருத்திய படிவம் தொகு

கோவிசய மகேந்திர வர்மற்குப் பதினெட்டாவது மீவேணாட்டு ஆந்தைப்பாடி ஈசைப் பெரும்பாணரசர் மருமக்கள் பொற்சேந்தியார் சேவகர் தொறுக் கொண்ட ஞான்று மீட்டுப் பட்டான் வேணாட்டு நந்தியார் கல்.

பின்குறிப்பு தொகு

  • வேணாடு என்பது வேள்+நாடு என்பதாகும். இது திருக்கோவலூர் முதலான ஊர்களைத் தன்னகத்தடக்கியதாகும். இதில் பல்லவ சிற்றரசர்கள் ஆட்சி புரிந்தனர்.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தண்டம்பட்டு_நடுகல்&oldid=1981196" இலிருந்து மீள்விக்கப்பட்டது