தண்டிகைக் கனகராயன் பள்ளு
தண்டிகைக் கனகராயன் பள்ளு, யாழ்ப்பாணத்தில் எழுந்த ஒரு பள்ளு வகைச் சிற்றிலக்கிய நூல். மாவிட்டபுரம் என்னும் ஊரைச் சேர்ந்த சின்னக்குட்டிப் புலவர் 18 ஆம் நூற்றாண்டின் இறுதியில் இந்நூலை ஆக்கியுள்ளார். யாழ்ப்பாண அரசன், கூழங்கைச் சக்கரவர்த்தி எனப்படும் முதலாம் ஆரியச் சக்கரவர்த்தி காலத்தில், தமிழ்நாட்டின் காரைக்காட்டுப் பகுதியில் இருந்து யாழ்ப்பாணத்தில் குடியேறியதாக யாழ்ப்பாண வைபவமாலை கூறும் கனகராயன் செட்டி[1] என்பவரே இந்நூலின் பாட்டுடைத் தலைவன். மேற்குறித்த கனகராயனின் வழிவந்த மாவிட்டபுரம் கனகராய முதலியார் என்பவரின் வேண்டுகோளின்படியே இந்நூல் ஆக்கப்பட்டதாகத் தெரிகிறது.
குறிப்புக்கள்
தொகு- ↑ மயில்வாகனப் புலவர், யாழ்ப்பாண வைபவமாலை (குல. சபாநாதன் பதிப்பு), இந்து சமய கலாச்சார அலுவல்கள் திணைக்களம், கொழும்பு, 1995. பக். 28.
வெளியிணைப்புக்கள்
தொகு- [https://web.archive.org/web/20160304131204/http://www.thejaffna.com/books/%E0%AE%A4%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A9%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%81 பரணிடப்பட்டது 2016-03-04 at the வந்தவழி இயந்திரம் "யாழ்ப்பாணம்" இணையத் தளத்தில் தண்டிகைக் கனகராயன் பள்ளு.]]