தண்டுலா அணை
தண்டுலா அணை (Tandula Dam) என்பது இந்தியாவில் சத்தீஸ்கரில் அமைந்துள்ள ஒரு அணையாகும். இது சத்தீசுகர் மாநிலம், பாலோட் மாவட்டத்தில் பலோட் கலெக்டரேட்டிலிருந்து சுமார் 2 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. இந்த அணைக் கட்டும் திட்டம் 1910ஆம் ஆண்டில் தண்டுலா மற்றும் சுக நாலா நதிகளின் சங்கமத்தில் தொடங்கப்பட்டு 1921இல் கட்டி முடிக்கப்பட்டது. இந்த அணை 827.2 சதுர கிலோமீட்டர்கள் (319.4 sq mi) நீர்ப்பிடிப்பு பகுதி கொண்டது. இது 333.415 மீட்டர்கள் (1,093.88 அடி) சேமிப்பு திறன் கொண்டது. அதிகபட்சமாக 333.415 மீட்டர்கள் (1,093.88 அடி) நீரை சேமிக்கும் திறனுடையது. இதன் வடிநிலப் பகுதி 25397 ஹேக்டேர் ஆகும். இந்த அணை துர்க் மற்றும் பிலாய் நகர் நிகாம் பகுதிக்குக் குடிநீரை வழங்குகிறது. மேலும் பிலாய் எக்கு ஆலையின் நீர்த் தேவைகளை இந்த அணையின் நீரே பூர்த்தி செய்கிறது. இறுதியில் தண்டுலா நதி சிவநாத் ஆற்றில் கலக்கிறது. [1]
மேற்கோள்கள்
தொகு- ↑ Jain, Sharad K.; Agarwal, Pushpendra K.; Singh, Vijay P. (16 May 2007). "Hydrology and Water Resources of India". Springer Science & Business Media. பார்க்கப்பட்ட நாள் 29 October 2017 – via Google Books.