கைக் கணினி

(தத்தல் கணினி இலிருந்து வழிமாற்றப்பட்டது)

கைக் கணினி (ஆங்கிலம்: Tablet Computer) என்பது ஒரு தொடுதிரை கொண்ட அட்டை வடிவிலான கணினி ஆகும். இதை வரைபட்டிகைக் கணினி என்றும் சொல்லலாம். இதன் உள்ளீடானது ஒரு விரல் நுனியாலோ அல்லது ஒரு எண்முறை பேனாவின் மூலமாகவோ தரப்படும். அவ்வாறு தரப்படும் அந்த உள்ளீடைத் தத்தல் என்று அழைப்பர்.[சான்று தேவை]

கைக் கணினி

மலிவு விலைக் கைக் கணினி

தொகு

35 டாலர்கள் மட்டுமே செலவாகும் படியான சாக்சாட் போன்ற முன்மாதிரிக் கைக் கணினிகள் மூலம் இந்திய ஆய்வாளர்கள் கூறுகின்றனர். ஆனாலும் கூட அதன் மூலப் பொருள்களின் விலை 47 டாலர்கள் ஆகும் என்று கூறப்படுகிறது. ஒரு குழந்தை ஒரு கைக் கணினி திட்டம் (ஒரு.கு.ஒரு.கை.) 100 டாலர்கள் கைக் கணினியை அறிமுகம் செய்துள்ளது. நிகோழசு நெக்குரோபோண்டன், ஒரு.கு.ஒரு.த திட்ட தலைவர், இந்திய ஆய்வாளர்களை இவ்வகையான கைக் கணினிகளை கட்டமைக்க மதராசு தகவல் தொழில்நுட்பத்திற்கு அழைத்துள்ளார்.[1][2][3]

இயக்கு தளம்

தொகு

வழக்கமான கணினிகள் போன்ற தத்தல்கள் பல வகையான இயங்கு தளங்களில் இயங்கக் கூடும். பிரபலமானவ விண்டோஸ், ஐஒஎஸ், மற்றும் ஆண்ட்ராய்டு ஆகும்.

முக்கிய வன்பொருள்

தொகு
  • மையச் செயற்பகுதி : கைக் கணினியில் x86, x86-64 அல்லது கட்டமைப்பு மையச் செயற்பகுதிகளை பயன்படுத்துகின்றன.
  • தாய்ப்பலகை
  • தொடுதிரை
  • திண்மநிலை நினைவகம்
  • முடுக்கமானி
  • புளுடூத் இசைவாக்கி மற்றும் கம்பியற்ற பிணைய இசைவாக்கி

மேற்கோள்கள்

தொகு
  1. "Definition of: tablet computer". PC Magazine Encyclopedia. பார்க்கப்பட்ட நாள் January 12, 2023.
  2. "tablet computer". Dictionary.com. Archived from the original on November 8, 2011. பார்க்கப்பட்ட நாள் April 17, 2010.
  3. Erica Ogg (May 28, 2010). "What makes a tablet a tablet? (FAQ)". CNET.com.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கைக்_கணினி&oldid=3893657" இலிருந்து மீள்விக்கப்பட்டது