தத்துவ விளக்கம் (நூல்)
தத்துவ விளக்கம் என்பது பெரியார் ஈ வே ரா எழுதிய ஒரு நூல் ஆகும். 1947 ஆம் ஆண்டில் சேலம் கல்லூரி தத்துவக் கலைக் கழகத்தில் பெரியார் ஈ வே. ரா ஆற்றிய சொற்பொழிவு ஒரு நூலாக ஆக்கப் பட்டுள்ளது. பெரியார் சுயமரியாதை பிரச்சார நிறுவனம் இந்நூலை வெளியிட்டது. இது பல பதிப்புகளைக் கண்டுள்ளது.
நூலின் உள்ளடக்கம்
தொகுகடவுள், மதம், மனித அமைப்பு, ஆத்மா, உயிர்-நான் என்னும் உள் தலைப்புக்கள் இந் நூலில் உள்ளன.
கருத்துகளில் சில
தொகுஇந் நூலில் தரப்பட்டுள்ள சில கருத்துகள்:
- தத்துவக் காட்சி, தத்துவ உணர்வு என்பன உண்மை. அதாவது உள்ளதை உள்ளபடி காண்பதும் அறிவதும் ஆகும். இயற்கை ஞானம் என்றும் சொல்லலாம்.
- ஆத்மா என்பதை ஆகாயத்தில் தளவாடம் இல்லாமல் கட்டப்பட்ட ஒரு கோட்டை என்று அழைக்கலாம். ஆத்மா என்னும் சொல் தமிழ் மொழியில் இல்லை. எனவே தமிழர்களுக்கு ஆத்மா கொள்கை இல்லை. ஆத்மா, மோட்சம், நரகம், மறு பிறவி, விதி, கர்மம் என்பன கற்பனைகளே. மனிதனுடைய ஆத்மா, உயிர் என்பவற்றின் தன்மைகள்தாம் விசேஷமாகப் பேசப்படுகின்றன. மற்ற சீவன்களின் ஆத்மா, உயிர் ஆகியன பற்றி பேசப் படுவதில்லை. உயிர் என்பது சரீரக் கூட்டு அமைப்பாலும், அதற்கு அளிக்கப்படும் உணவாலும் இயங்கிக் கொண்டு இருக்கும் தன்மையேயாகும்
- கடவுளால் சர்வமும் நடைபெறுகின்றன; கடவுள் சர்வ வல்லமை, சர்வ வியாபகம் உள்ளவர் என்பதாக இருந்தும் கடவுளால் என்ன காரியம் நடக்கிறது? எதையும் கடவுள் பெயரைச் சொல்லி மனிதன் தான் செய்கிறான். கடவுளை அலட்சியப் படுத்திவிட்டு கடவுளுக்கு இஷ்டமில்லாத காரியம் என்பதைக்கூட மனிதன் செய்கிறான். மனிதனுக்கு வேண்டாததும் மனிதனுக்குக் கேடானதுமான காரியமும் நடந்த வண்ணமாய் இருக்கின்றன. செல்வனும் அரசனும், மேல்மகனும் கீழ்மகனும் வேண்டாம் என்றால் அல்லது இல்லாமல் செய்யப்பட்டு விட்டால் (போய்விட்டால்) கடவுளும் மதமும் தேய்ந்து மறைந்துபோகும் தன்மையை அடைந்துவிடும்.
உசாத்துணை
தொகு- தத்துவ விளக்கம் நூல், வெளியீடு -பெரியார் சுயமரியாதைப் பிரசார நிறுவனம். சென்னை-7
வெளியிணைப்புகள்
தொகு- பெரியார் எழுதிய - பதிப்பித்த நூல்கள் பரணிடப்பட்டது 2016-02-25 at the வந்தவழி இயந்திரம்