தந்தைவழிப் பெயர்

தந்தைவழிப் பெயர் (patronym, அல்லது patronymic) என்பது ஒருவர் தனது தந்தை, பாட்டன் அல்லது ஆண் மூதாதை ஒருவரின் பெயரை அடிப்படையாகக் கொண்ட பெயர் ஆகும்.[1] இது தாய்வழிப் பெயருக்கு நிகரான ஆண்பாற் பெயரிடல் முறை ஆகும். உலகின் பல்வேறு பண்பாடுகளில் இம்முறை வழக்கில் இருந்து வருகிறது. பல நாடுகளில் இது ஒரு சட்டப்படியான தேவையாகவும் உள்ளவு. எனினும் இம்முறை வழக்கில் இருந்த உலகின் பல பகுதிகளில் இது தந்தைவழிக் குடும்பப் பெயர் முறையாக மாறிவிட்டது.

வரலாறு தொகு

உலகின் பல்வேறு பகுதிகளில் தந்தைவழிப் பெயர் முறையே குடும்பப் பெயருக்கு முற்பட்டதாக இருந்துள்ளது. செல்ட்டிய, ஆங்கில, ஐபீரிய, இசுக்கன்டினேவிய, ஆர்மேனிய, சிலாவியக் குடும்பப் பெயர்கள் பல தந்தைவழிப் பெயர்களில் இருந்தே தோற்றம் பெற்றன. எடுத்துக்காட்டாக, வில்லியம்சன், வில்சன் ஆகிய குடும்பப் பெயர்கள் வில்லியத்தின் மகன் என்பதில் இருந்து தோன்றியது. இது போலவே, பெர்னான்டஸ் என்பது பெர்னான்டோவின் மகன், கார்ல்சன் என்பது கார்லின் மகன், பெட்ரோவ் என்பது பீட்டரின் போன்ற பொருள் கொண்டவை.

பயன்பாடு தொகு

தந்தைவழிப் பெயர்கள் இந்தியாவின் பல பகுதிகளிலும், பாகிசுத்தானிலும் பயன்பாட்டில் உள்ளன. இலங்கையிலும்,[2] இந்தியாவிலும் வாழும் தமிழரிடையேயும் இவ்வழக்கம் பரவலாக உள்ளது. எடுத்துக்காட்டாக சுப்பிரமணியன் என்பவருக்குப் பிறக்கும் மகனுக்கு சிவநேசன் எனப் பெயர் இட்டால் அவரது முழுப் பெயர் சுப்பிரமணியன் சிவநேசன் ஆகும். சிவநேசனுக்குப் பிறக்கும் மகன் செந்தில் எனப் பெயர் பெற்றால் அவனது முழுப் பெயர் சிவநேசன் செந்தில் என்று எழுதப்படும். இவ்வாறே ஒவ்வொருவரும் தனது தந்தையின் பெயரைத் தன்னுடைய பெயருடன் சேர்த்து வழங்குவர். குடும்பப் பெயர் முறையைப் போல் அன்றி இம்முறையில் ஒரு பெயர் தலைமுறைகளாகத் தொடர்ந்து வருவதில்லை.

குறிப்புக்கள் தொகு

இவற்றையும் பார்க்கவும் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=தந்தைவழிப்_பெயர்&oldid=1736853" இலிருந்து மீள்விக்கப்பட்டது