தந்தை மகளுக்கு எழுதிய கடிதங்கள் (நூல்)
தந்தை மகளுக்கு எழுதிய கடிதங்கள் (Letters from a Father to His Daughter) என்பது, சவகர்லால் நேரு தன் மகள் (10 வயது) இந்திரா பிரியதர்சினிக்கு இயற்கை வரலாறு மற்றும் உலக நாகரிகங்களின் தோற்றம் பற்றிய விவரங்களை விளக்கி எழுதிய 30 கடிதங்களின் தொகுப்பு நூலாகும்.
சவகர்லால் நேரு மற்றும் இந்திரா காந்தி | |
நூலாசிரியர் | சவகர்லால் நேரு |
---|---|
பட வரைஞர் | Puffin Books |
நாடு | இந்தியா |
மொழி | ஆங்கிலம் |
வெளியீட்டாளர் | அலகாபாத் சட்ட இதழ் அச்சகம் (Allahabad Law Journal Press) |
வெளியிடப்பட்ட நாள் | 1929 |
OCLC | 47215515 |
இக்கடிதங்களை எழுதும்போது நேரு அகமதாபாத்திலும் இந்திரா முசௌரியிலும் இருந்தனர். இக்கடிதங்கள் ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருந்தன. பின்னர் அவை புகழ்பெற்ற நாவலாசிரியர் முன்சி பிரேம்சந்த் என்பவரால் இந்தியில் மொழிபெயர்க்கப்பட்டன. அவை இந்தியில் பிட்டா கீ பத்ரா புத்ரி கீ நாம் என்ற பெயரில் புத்தகமாகத் தொகுக்கப்பட்டது.[1]
மேற்கோள்கள்
தொகு- ↑ Balakrishnan, Anima (2006-08-04). "The Hindu : Young World : From dad with love:". Chennai, India: The Hindu இம் மூலத்தில் இருந்து 2009-11-12 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20091112142131/http://www.hindu.com/yw/2006/08/04/stories/2006080402320600.htm. பார்த்த நாள்: 2008-10-31.